Saturday, June 25, 2011

கொஞ்சம் பெரிய பின்னுட்டம் -2

தேடல்
தேடல்கூட ஒருவிதமான இச்சையா அல்லது காதல் போல அதுவும் ஒரு உணர்வா ??

ஒவ்வருவருக்கும் ஒரு விதமான தேடல்கள் கண்டிப்பா இருக்கும்.

கற்றல் நிற்கும் பொழுது முன்னேற்றம் தடைபடுவது போல , தேடல்கள் குறையும்பொழுது நமது வாழ்வியல் சார்ந்த வளர்ச்சியும் கொஞ்ச கொஞ்சமா நின்றுவிடும் என்பது என் கருத்து.

எதை நோக்கிய தேடல் ஆரோக்கியமானது ..? அது இன்றும் விவாதத்துக்கு உரியது..

தேடல்கள் நல்லதா , கெட்டதா ? அது அவரவர் கண்ணோட்டத்தை பொருத்தது..

மொத்தத்துல தேடல்களால் மட்டுமே ஒருவரை புதுபிக்க முடியுமங்குறது எனது ஆழ்ந்த நம்பிக்கை..

தேடல் பத்தியும் அதோட சாரம்சம் பத்தியும் அதிகம் பதிவு செய்யும் எழுத்தாளர்களில் எழுத்தாளர் திரு.எஸ். ராமகிருஷ்ணன் மிக முக்கியமானவர். அவரோட எழுத்துகளில் பயணம், கலாச்சார மாற்றம் மற்றும் சக மனித உணர்வுகளின் வெளிபாடுகள் அதிகம் காணப்படும்.

அவரோட நூல்களில் கேள்விக்குறி என்ற ஒரு புத்தகம்...... அதுல உள்ள கேள்விகள்ல குறைந்தபட்சம் ஒரு கேள்வியாவது நம்ம அன்றாட வாழ்க்கையில எதிர்கொண்டு இருப்போம்.

அத்தனையும் மனசுல நெறிச்சி முள்ளாக இறங்கும் கணைகள்.

நான் அதுல உள்ள நிறைய கேள்விகளை எதிர்கொண்டு இருக்கேன்.

அத்தனையும் என்னோட அவமான பக்கங்களில் அனுபவமாக சேர்ந்து இருக்கு.

சுமார் ஒரு இரண்டு வருடங்களுக்கு முன்பு "Into the Wild" னு ஒரு படம் பார்த்தேன். அந்த உண்மை கதைய மையமா கொண்ட படம் ..உங்களோடு பகிர்ந்துக்க விரும்புகிறான்.

ஒரு கல்லூரி மாணவன் பட்ட படிப்ப முடிசிட்டு .. அந்த பொழுது வரை சம்பாரித்த அனைத்தயும் ஒதுக்கிவிட்டு .. போலித்தனம் இல்லாத வாழ்க்கைமுறைய தேடி பயணப்படுகின்ற, அனுபவம் முலமா கற்றுக்கொள்ளுதல் நிறைவைத்தரும்னு சொல்லுற படம்..



தேடி பாருங்க...


தேடல் இல்லா வாழ்க்கை
காதல் இல்லா காமம் போல...

இன்னும் தொடரும்

Tuesday, June 21, 2011

கொஞ்சம் பெரிய பின்னுட்டம் !

தனிமை

இன்னும் 15 நிமிசம்தான் இருக்கு கார்த்திக்.. எதாவது சொல்லனும்ன இப்பவே சொல்லிடுங்க.. போனதுக்கு அப்புறம் தனியா பொலம்பாதிங்க..

என்ன சொல்லுறது .. நிறைய பேசியாச்சு .. நிறைய சொல்லியாச்சு .. இந்த Flight போடுற கூச்சல விட ..என்னுடைய மனசு போடுற கூச்சல் அதிகமா இருக்கு ..
அந்த 15 நிமிசம்தான் "அழகிய அம்மு"

என்னை சுற்றி நிறைய கல்யாணம் ( ஒரு சில மணவாழ்க்கை தவிர ) சுமார் 90 சதவித கல்யாணம் தோற்று போனதாகவே இருக்கிறது.. என்னுடைய கல்யாணம் முதற்கொண்டு .. எங்கோ , எதற்கோ , எப்பொழுதோ, எப்போழுதுமோ ஒரு சமரசத்துல வாழ்க்கை பயணப்பட்டுகொண்டு இருக்கிறது ..

அரிதாய் கிடைக்கும் மலர்ச்சியும் , என்னை சுற்றிய தனிமையும் , வாழ்க்கையில் உள்ள வெறுமையும் அடிநாதம் போல கூடவே வாழ்கிறது.

தோழிகிட்ட இதப்பத்தி உரையாடும்போது .. தோழி சொன்ன .. வாழ்க்கைனா எதாவது விட்டுகொடுத்துதான் ஆகனும் .. சில சமயம் சுய விருப்பம் அல்லது நம்மோட சுய கௌரவம்கூட இருக்கலாம் .. முடிவா விட்டுகொடுத்துலே வாழ்க்கை.. பழய விஷயம்தான் ..எனக்கு இப்பொழுது எல்லாமே புதுசாபடுது..

காதல், தனிமை இதப்பத்தி எழுதும்போது ஒரு படம் ஞாபகம் வருது .. "Just Like Heaven" ஆங்கில படம்தான் ..


மனைவிய இழந்த ஒரு காதலன் பழசை மறப்பதுக்கு புது வீடுக்கு குடிபோகின்றான். அங்கு ஏற்க்கனவே வாழ்ந்த பெண்ணோட ஆன்மாவுக்கும் அவனுக்குமான நட்பு , அதன் வழியே அந்த பெண் இன்னும் மருத்துவமனையில் COMAவில் இருப்பதை அறிந்து அவள் ஆன்மாவை உடம்போடு சேர்த்து வைக்கும் படம் .. முடிவு ரொம்ப சுவாரசியம்.

இங்கேயும் திகட்ட, திகட்ட காதல் .. அனைத்தையும் 5 லிருந்து 10 நிமிசத்துகுள்ள சொல்லிவிடுவார் இயக்குனர்.

வாய்ப்பு கிடைச்ச பாருங்கள் .. காதல் மட்டும் கசக்குறதே இல்லை .. எவ்வளவு வலியை கூடுத்தலும் ..

இன்னும் தொடரும் ..

Monday, July 19, 2010

மீன் கொழம்பு..

எப்போதும் போல அவசர அவசரமா அலுவலகத்துக்கு கிளம்பிட்டு இருந்தேன். 8 மணிக்குள்ள ரயில் ஏறினாதான் சரியான நேரத்துக்கு அலுவலகம் போக முடியும். இந்த அவசரத்துல நான் எதையும் கவனிக்க உன்டான நேரம் ரொம்ப குறைவு.

ம்ம்ம்ம்ம்....

என்ணோட மனைவியோட குரல். என்னை கூப்பிடுறாங்கனு அர்த்தம். இந்த 1 1/2 வருசத்துல ம்ம்ம்.. க்கும்ம்.. இப்படினு ஒரு 10ல இருந்து 15 வகை கேட்டு இருக்கேன். ஒவ்வொன்னுக்கும் ஒரு அர்த்தம்னு கண்டுப்பிடிக்கிறதுக்குள்ள... சரி அதவிடுங்க. இதபத்தி எழுதனும்னு ஆரம்பிச்சா மொத்த தலைப்பையே மாத்தியாகனும்.

என்ன ? ( இது நான் !)

ஊர்லேந்து கெஸ்ட் வராங்க..இப்பதான் போன் வந்தது..

சரி.. அதல்லாம் நீயே பார்த்துக்கோ.. சாய்ந்திரம் நான் வந்ததுக்கப்புறம் மத்தத பார்த்துக்கலாம்..

சரி .

வீட்டு மாடிபடி இறங்கும்போதுதான் ஒரு விஷயம் ஞாபகம் வந்தது.. இந்த வீட்டுக்கு வந்து இரண்டு வாரம் தான் ஆகுது.
இப்பதான் முதல் முறையா எல்லாரும் வராங்க. எதாவது அசைவம் வாங்கி சமைச்சா நல்லா இருக்கும்னு நினைச்சேன்.
நேரம் இல்லாதனால ஒரு ஆட்டோ பிடிச்சு இரண்டு கிலோமிட்டர் துரத்துல உள்ள மார்க்கட்டுல மீன் வாங்கிட்டு வீட்டுக்கு போன் பன்னினேன்.

ம்ம்ம்ம்...

நான் ஆட்டோல வீட்டுக்கு வந்துட்டு இருக்கேன். கொஞ்சம் கேட்டுக்கு வெளிய வந்து நிக்கிறியா...?

எதுக்கு ?

எதுக்கா..?

சரி வரேன்...

அவுங்க கேட்டுக்கு வரவும் நான் வீட்டுக்கு வரவும் சரியா இருந்துச்சு. 2 கிலோ மீனை கையில கொடுத்தேன்.

வாங்கிட்டு ஒரு கேள்வி கூறி பார்வை..

என்ன இது..? ( அப்படினு நானே நினைச்சிக்கிட்டேன்.. வேற என்ன கேள்வி இங்க பொருத்தமா இருக்கும்னு எனக்கு தெரியல..)

சொந்தகாரங்க வீட்டுக்கு வராங்கனு சொன்னல்ல.. அதுதான் மீன் வாங்கிட்டு வந்தேன்.. பாதி கொழம்பு வச்சி மீதிய வறுத்து வையி..

சரி...... பன்னுறேன்...... அப்படினு எந்த ஒரு வார்த்தையும் இல்ல.. ஆனா முகத்துல அதிர்ச்சியும், ஆச்சர்யமும் இருந்தது.

எனக்கு உள்ளுக்குள்ள கொஞ்சம் பெருமை, சொந்தகாரங்க வராங்கனுதும் எப்படி பொருப்பா மீன் வங்கிட்டு வந்துட்டேனு முகத்துல அதிர்ச்சி, ஆச்சர்யம் போலனு..

அவசரமா திரும்பி ஆட்டோல ஏறப்போன ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் காதுக்குள்ள அடிச்ச மாதிரி ஒரு வார்த்தை.. இருந்தாலும் ஒரு சந்தேகத்தோட பாதி திரும்பின மாதிரி ஆட்டோல ஏறப்போன..

மாமா...

அதிர்ச்சியும், ஆச்சர்யமும் இப்போ என்னோட முகத்துல. இப்படி என்ன யாரும் கூப்பிட்டது இல்லை.. அதுமட்டும் இல்ல இவங்க என்னை " எப்படியும் " கூப்பிட்டது இல்லை..

அந்த அ, ஆ எதுவும் மாறாம பக்கத்துல போயி என்ன விஷயம்னு கேட்டா..

மாமா... எனக்கு மீன் கொழம்பு.........

இதுக்கப்புறம் நடந்தது எல்லாம் மகா, மெகா அதிர்ச்சியான சம்பவங்கள்..

வந்த விருந்தாளிங்க எல்லாம் நல்ல மீன் கொழம்பு, ரசம்னு சாப்பிட்டு மறுநாள்தான் போனங்க..

ஆனா ஒரு விஷயம் மட்டும் புரியவே இல்லை.. மறுநாள் நல்லபடியா ஊர்போய் செந்தாங்களா.. நல்லா இருக்கிங்களானு தெரிஞ்சிக்க போன் பன்னா எடுக்கவே மாட்றாங்கா..

தென்னாலிராமன் " பூனை பால் கதையா இருக்குமோ...."

Thursday, March 26, 2009

வேணாங்க.. ப்ளிஸ்..

வேணாங்க.. ப்ளிஸ்..

செல்லம் இந்த ஒரே ஒரு தடவை...

இப்ப வேணாமே..

ஏன்டி...

எல்லொரும் இருக்காங்க விடுங்கனா...

இன்னைக்கு மட்டும்... அதுவும் இப்ப மட்டும்.. ப்ளிஸ்...

எனக்கு வெக்கவெக்கமா வருது.. சொல்லுரத கேளுங்க.. விடுங்க....

என்ணோட கண்ணப்பாரு மொதல்ல.. பாருன்னா..

ம்க்கும்... முடியலமா...

இங்கதான் யாரும் இல்லையில.. அப்புறம் என்ன..

பக்கத்து ரும்லதான் அத்தை இருக்கங்க... விடுங்க் ப்ளிஸ்...

இப்ப மட்டும்.. இனிமே டிஸ்டர்ப் பன்ன மாட்டேன்.. சத்தியமா...

இப்ப வேனாம்.. இரத்திரி...

அருமை பொண்டாட்டியே.. நா என்ன.. முத்தமா கேட்டேன்..

கண்ணுக்கு மை வெச்சிவுடறனு தாணே.. கெஞ்சிறேன்..

இப்படி வெக்கபடுற.. ஆன்டவா...

Tuesday, March 24, 2009

சிவா மனசுல கார்த்திக் ????

வாழ்கையில சில பெண்கள் மட்டும் முழுசா மனச ஆக்கிரமிக்றாங்க... எவ்வளவு யோசிச்சாலும் எப்படினு கண்டுபிடிக்க முடியல ... இந்த கடைசி 5 மாசமா என்னை முழுசா ஒரு பொண்ணு பைத்தியாமாக்கிட்டா..

சுருக்கமா சொல்லனும்னா வெயில் காலத்துல வர சின்ன நிழல் மாதிரி எவ்வளவு அனல் இருந்தாலும் அந்த குளுமைக்கு மனசு எங்குமே அப்படி ஒரு பொண்ணு

எல்லா காதலையும் கண்ணுல மறச்சு, வார்த்தையால கொல்லுறது எப்படினு போட்டி வச்சா இவங்களுக்குதான் முதல் பரிசு... அவ்வளவு நல்லவங்க !!

இவங்க கிட்ட " ஐ லவ் யு" சொன்னா ஒன்னு " சரி " இல்லை "முடியாதுனு" சொல்லனும் அதவிட்டுட்டு இவுங்க பண்ண "அட்வஸ்ல" அந்த பையன் ஓட்டல்ல 3 நாள் ரூம் போட்டு அழுதுட்டு பாதிரியாரா மாறிட்டான்.

நானும் இந்த 5 மாசமா 8, 11 எல்லாம் போட்டு காட்டி ஒரு வழியா கொஞ்சம் நெருக்கமானதுக்கப்புறம்.. ஒரு நல்ல நேரம் பார்த்து "ரொமட்டிக் நைட்னு" சொல்லுவாங்கள்ல அப்படி ஒரு நேரம்..

அழகா ஒரு ரோஸ் கொடுத்து

ஸ்வீட்டி உன்ன லவ் பண்ணுறேன்..
கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசைபடுறேன்...

" உன்ன லவ் பண்ணத்துக்காக இல்ல.. இன்னும் லவ் பண்றதுக்காக"

அப்படினு சொன்னா.... அதுக்கு அவ சிம்ப்புலா... கார்த்திக். இந்த 12பி பஸ் தெனாம்பேட்டை வழியா போகுமானு .......

அந்த சோகத்துல நான் அழறத பார்த்துட்டு "காதலர் சங்கத்துல" இருந்துகூட வக்கில் நோட்டிஸ் அனுப்பினாங்க... ஆனாலும் ரிசல்ட் என்னமோ நான் 8த் கணக்கு பரிட்சைல எடுத்த மார்க்கு "O" தான்.

அதனால இந்த பிலகு கூரும் நல்லுலகத்தை வேண்டுவது என்னனா.. என்னொட இரண்டவது இன்னிங்க்சும், காதலும் ஜெ.ஜெனு இருக்க இந்த கருணவை வாழ்த்துமாறு கேட்டுக்கிறேன்.

ஊருக்கே எப்படியேல்லாம் காதலிக்கறதுனு சொன்ன எனக்கு இப்ப ஒரு ஐடியா கூட வர மாட்டங்குது... ஒபனிங்க் நல்லதான் இருக்குது... பினிசிங்கு சரியா இல்லைப்பா....

விதி வலியதுனு எல்லாரும் சொன்னப்போது கூட நான் நம்பல... ஆனா எனக்குனு இப்படி ஒரு நிலைமை வந்தாப்புறம்தான் அது உன்மைனு தெரிச்சுக்கிட்டேன்..

நானும் காதலில் விழுந்தேன் !

Friday, March 20, 2009

வந்துடோம்முல !!

எந்த நேரத்துல இந்த பதிவுக்கு விடுமுறை விட்டானோ , சுமார் ஆறு மாசம் நிறைய வேலை , நிறைய தனிமை , கொஞ்சம் சந்தோசம் , கொஞ்சம் காதல் .. இதுதான் இந்த ஆறு மாசம் என்னோட வாழ்க்கை .. திடீர்னு காதலே வாழ்க்கையில இல்லாம போன மாதிரி ஒரு நினைப்பு...

அதனாலதான் எனக்கு ஒண்ணுமே எழுத தோனல ..

இன்று முதல் எனது இனிய இரண்டாவது துவக்கம்... இனிமே தொடர்ந்து எழுதுவேன்... வேற எத பத்தி காதல் காதல் காதல் தான்......

அன்புடன்

கருணாகார்த்திகேயன்

Friday, September 19, 2008

கல்யாண சேதி !!

அன்புடையீர் !!

இதனால் அனைவருக்கும் தெரிவிப்பது இன்னான... எனது அருமை தம்பி முரளிதரனுக்கும் அவநோடைய நேசம் ப்ரீத்திக்கும் கல்யாணம் என்று வருகிற நவம்பர் 2 ஆம் தேதி பெரியவர்களால் முடிவு செய்யப்பட்டது.

முடியாதுன்னு மக்கர்பண்ண இரண்டு வீட்டுகாரங்க கழுத்துலையும் கத்தி வச்சதால அவுங்களே பெரிய மனசு பண்ணி சுமுகமா ஒத்துகிட்டாங்க.. வேற வழி...

உடனே உனக்கு எப்போனு கேட்காதிங்க...

சிக்கினா சொல்லாமல போயிடுவேன்....

வாழ்த்துக்கள் சொன்ன ரொம்ப சந்தோசம்..

என்றும் அன்புடன்
கார்த்திக்