Wednesday, May 21, 2008

எங்கே என் தேவதை !

சமீபத்தில் நண்பன் ஒருவனை பார்க்க ஊருக்கு சென்றுருந்தேன். என்னிடம் 6 வருடத்துக்கு முன்பு பத்திரபடுத்தி வைக்க சொல்லிய டைரியை திருப்பிகொடுக்க. எப்போதும் போல வீடு அமைதியாகவே இருந்தது. ஆனால் அதில் ஒரு அசாதரன சூழ்நிலை இருப்பதாக மனசுக்குபட்டது.


எனக்கு நன்கு பழக்கப்பட்ட வீடு அது. நேராக உள்ளே சென்றேன். வழக்கம் போல அன்பான வரவேற்பு. ஆனால் எல்லோர்் கண்களிலும் ஒருவித சோகம், எல்லோருடைய நலமும் விசாரித்துவிட்டு நண்பன் எங்கே என கேட்க திரும்பினேன்.. எத்தேச்சையாக சாமி அறை கண்ணில்பட்டது... அங்கு அவன் மாலை அலங்காரங்களுடன்.. படமாக.. எனக்கு அந்த வீடு சுழலுவதைபோன்ற உனர்வு.

பாவம், காதல் அவனை கடவுளாக மாத்திவிட்டது, அதற்குமேல்் அங்கு இருக்க பிடிக்காமல் நடந்தே ரயில் நிலையம் வந்து சேர்ந்தேன். இந்த ரயில் நிலையத்தில் எத்தனை நாள் அவனோட காதல் பத்தி பேசி இருப்பேன்... எல்லாம் கனவாய். அவனது காதலை பத்தி பேசாத நாளே இல்லை. அவன் உயிரேடு இருக்கும் வரை.. இப்போது அவனோட டைரி மட்டும் அவனது காதலை சுமந்து கொண்டு எனது கைகளில்்.

கையில் உள்ள டைரியின் பக்கங்கள் காற்றில்் படபடத்தது. அதில் சில பக்கங்கள் உயிர் உள்ள காதலை பத்தியது. அனைத்தும் அழகானவை ! அவனது காதலை போலவே ! அந்த காதலில் இருந்து......

பக்கம் 1 :

கல்லூரி முடிச்ச சமயம் அது.. ஒரு கம்பெனில வேலைக்கு சேர்ந்து 5, 6 மாசம் கடந்து இருக்கும், முதல் முதலாய் அவளை பார்த்தேன். நமக்குத்தான் தடுக்கி விழுந்தாலே காதல் வருமே.. ஆனாலும் அந்த உணர்வு எனக்கு புதுசு.. அப்போது தெரியாது அவள்தான் எனது வாழ்க்கையை மாத்தபோகும் தேவதையாக போகிறாள் என்று !

தேவதையை பார்த்த முதல் ஷனமே எங்களது சந்திப்பு நிகழ்ந்தது. புடிச்ச விசயத்தை செய்யும்போது நேரம்போவது தெரியாது.. எனக்கும் அப்படிதான். இரண்டு பேரோட பேச்சும் அன்பை பத்தியதாகவே இருந்தது. நிறைய தேடல்கள் மட்டுமே நிறைந்த காதலை தருங்கிறதுல இரண்டுபேரும் ஒத்து போயிருந்தோம் ! அப்புறம் தொடர்ந்து எங்களது சந்திப்பு ....


பக்கம் 48 :

அவள் இல்லாத வாழ்க்கை சூன்யவெளியில் பயனிப்பது மாதிரி இருக்கும்னு நினைக்கிறேன். அந்த காதல் வழிந்தோடும் பேச்சு, காமமும் , ஏக்கமும் கலந்த பார்வை.. கண்ணைழூடினாலும் உன்னோட காதல் என் முச்சை அழுத்தும்னு நினைக்கிறேன். மனசுநிறைய காதல் இருந்தும் காதோடு சொல்ல முடியாத தவிப்பை என்னனு சொல்ல ...


பக்கம் 72 :

நீ கலைக்காத கேசம் !
கலையாத ஆடை !
கசக்காத காதல் !
எல்லாம் தனிமையில் !
நானும்தான் !

*இப்படிக்கு நான் !

நீ கலைக்காத கூந்தல் !
கலையாத குங்குமம் !
கலையாத ஆடை !
கசங்காத பூ !
எல்லாம் தனிமையில் !
நானும்தான் !

*இப்படிக்கு தேவதை !

காதல்ல ஒரு விசயம்தான் புரிஞ்சிக்கவே முடியாதது, நானும் அவளும் சேர்ந்த மாதிரி ஒரு 10 நாள்கூட பார்த்தது கிடையாது. ஆனாலும் புரிதல் மட்டும் 100 வருடம் வாழ்ந்ததுக்கு சமமாக இருந்தது ஒரு ஆச்சரியம்்.. அந்த காதல்..

பக்கம் 98 :

எல்லா காதல் படத்திலையும் Climax என்னவோ சுபமாகத்தான் இருக்கும். அதே போல என்னோட காதலும் கல்யானத்துலதான் முடிந்தது. என்ன ஒன்னு எனக்குகூட கல்யான பத்திரிக்கை கொடுக்க மறந்துடாங்கனு நினைக்கிறேன்..

இதுக்கு மேல உள்ள பக்கங்கள் எல்லாம் வலிகள்.. ...

எங்கோ கண்காணாத இடத்தில் கஸ்டபடும் அந்த தேவதைக்கும்..
பெத்தவர்களால் மறுக்கப்பட்ட, காதலர்களால்் மறைக்கபட்ட கவித்துவமான காதலுக்கும் இந்த கட்டுரை சமர்ப்பனம் !!

22 comments:

Sukanya S Vinod said...

Hi Karthik,

I am very sorry about Your frnd. Neenga nijamavey romba feel panna vachiteenga. Yen sila Parents epadi adam pudikraanga??????? Wat they really want? Avanga kozandhaingaloda Sandhoshatha pathi avangaluku kavalai illaya. Avanga Gowravam dhan avangaluku mukyama? Plz andha maadhiri Parents kaagavu Neega oru Blog yezudhanum :-)

Regards
Sukanya S Vinod

கார்த்திகேயன் . கருணாநிதி said...

//Sukanya S Vinod said,

I am very sorry about Your frnd. Neenga nijamavey romba feel panna vachiteenga. Yen sila Parents epadi adam pudikraanga??????? Wat they really want? Avanga kozandhaingaloda Sandhoshatha pathi avangaluku kavalai illaya. Avanga Gowravam dhan avangaluku mukyama? Plz andha maadhiri Parents kaagavu Neega oru Blog yezudhanum :-)

//

மிக்க நன்றி ..

காதல்ல இது எல்லாம் சகஜம்னு நினைக்கிறேன் சுகன்யா !

அன்புடன்
கார்த்திகேயன்

Hemalakshmi Sekar said...

Varthaiyai thaedugiraen ungalai parata..... Ennudaiya manamardha valthukal....
Padikum Poludhu enna maradhu pattithaen.....ovi oru varthaigalum alagaga saethuki irrukinga.....Innum sila parents appadi irrukanga, cant change those ppl... karpnaiya illa idhu unmai sambavama nu ennaku thaeriyala...but padika romba nalla irrudhuchu.. nan romba rasichu padicha...
medum ennudaiya valthukal...
ungal
Hemalakshmi Sekar

கார்த்திகேயன் . கருணாநிதி said...

// Hemalakshmi Sekar said...

karpnaiya illa idhu unmai sambavama nu ennaku thaeriyala... //

பாதி கதை, மீதி நிஜம் !
மிக நன்றி .. பாராட்டுக்கு

அன்புடன்
கார்த்திகேயன்

Bharanidharan said...

Hi Karthick,
Very nice Story..
Really Awesome...
Yeppadi nga intha mathiri yellam ungalale mattum mudiyuthu...
Room pottu yosipingolo????:)))
superrrrrrrrrr.

கார்த்திகேயன் . கருணாநிதி said...

மிக நன்றி Mamas, .. பாராட்டுக்கு

அன்புடன்
கார்த்திகேயன்

Anonymous said...

The real discription is discribed in a short form.... It is another autograph...

Each one will not pass through the same situation but each will pass thorugh this condition.

I mean a lot .... hope you get it.

Words handled excellently well. Those situations of sorrow has brought so much of name & made you (Your friend) an experienced...

CONGRATS FOR MORE OF THIS SORT !!

PATHROSE.D

கார்த்திகேயன் . கருணாநிதி said...

//path said...
The real discription is discribed in a short form.... It is another autograph...
//

மிக்க நன்றி ..
வந்தமைக்கு .. பாராட்டுக்கும்

அன்புடன்
கார்த்திகேயன்

Kalpana R said...

Karthik, Nammala suthi irukravanga kitta irundhae neraya kathukalam. and neenga pathadhu mattum illama ellarukkum unga ezhuthu moolama solreenga. really nice. And indha article la neenga solli irukra madri innum evlo per irukanga theriyuma. 50% mela appadi kashta padravanga dhan irupanga. And neenga sonna friend uyiroda illa. But sagavum mudiyama daily adha nenachu nimadhiya irukavum mudiyama kashta padravanga adhigam. Love panravangala sethu vecha enna thappunu theriyala Karthik. Indha vishayathula dhan sila parents sa nenacha kashtama irukku...konjam kovamum varudhu.

கார்த்திகேயன் . கருணாநிதி said...

//Kalpana R said...
Love panravangala sethu vecha enna thappunu theriyala Karthik //


என்னிடம் மறுமொழி இல்லை கல்பனா !
மிக்க நன்றி
அன்புடன்
கார்த்திகேயன்

Sivarama said...

Anbu Karthik,

Neengal ezhuthai muzhu nEra thozhilaaha vaithukkOLLalaam pOlum!(Naan solvadhai vaithu irukum vElayaivittu vidaatheerkaL!)

UngaL thamizh nadai nandraaha irukkiRathu!

Oru siRu kuRai!
Ra,ra; na,Na,; la, La;idhai ellaam orumuRai paarthu edit seithuvidungaL;
anbudan
sivaramakrishnang

Divya said...

அழகான நடையில் சோகமான காதல் கட்டுரை!!

\\நீ கலைக்காத கேசம் !
கலையாத ஆடை !
கசக்காத காதல் !
எல்லாம் தனிமையில் !
நானும்தான் !

*இப்படிக்கு நான் !

நீ கலைக்காத கூந்தல் !
கலையாத குங்குமம் !
கலையாத ஆடை !
கசங்காத பூ !
எல்லாம் தனிமையில் !
நானும்தான் !

*இப்படிக்கு தேவதை !\\

அருமையாக செதுக்கப்பட்ட வார்த்தைகள் கவிதையில்......மிகவும் அருமை!

Divya said...

\\எல்லா காதல் படத்திலையும் Climax என்னவோ சுபமாகத்தான் இருக்கும். அதே போல என்னோட காதலும் கல்யானத்துலதான் முடிந்தது. என்ன ஒன்னு எனக்குகூட கல்யான பத்திரிக்கை கொடுக்க மறந்துடாங்கனு நினைக்கிறேன்..\\

இன்னும் அழுத்தமாக இதை வார்த்தைகளில் வெளிப்படுத்தியிருக்கலாமோ??

Divya said...

\\அந்த காதல் வழிந்தோடும் பேச்சு, காமமும் , ஏக்கமும் கலந்த பார்வை.. கண்ணைழுடினாலும்் உன்னோட காதல் என் முச்சை அழுத்தும்னு நினைக்கிறேன். மனசுநிறைய காதல் இருந்தும் காதோடு சொல்ல முடியாத தவிப்பை என்னனு சொல்ல ...\\

காதல் ஏற்படுத்தும் உணர்வுகளை நேர்த்தியாக உணர்த்துகிறது இவ்வரிகள்!

Divya said...

அசாதறன சூழ்நிலை -> அசாதரன

எல்லோற் கண்களிலும் -> எல்லோர்

எத்தாச்சாயாக சாமி -> எத்தேச்சையாக

அதர்க்குமேல் அங்கு -> அதற்குமேல்

எனது கைகளிள்-> கைகளில்

காட்றில் படபடத்தது-> காற்றில்

கல்லுரி முடிச்ச -> கல்லூரி

உனர்வு எனக்கு புதுசு-> உணர்வு

தேவதையாக போகிறால் -> போகிறாள்

ஒரு ஆச்சறியம்.. -> ஆச்சரியம்

கல்யானத்துலதான் முடிந்தது. என்ன ஒன்னு எனக்குகூட கல்யான பத்திரிக்கை கொடுக்க மறந்துடாங்கனு நினைக்கிறேன்..-> கல்யாணம்


என் கண்களில் தென்பட்ட எழுத்துப்பிழைகளை சுட்டிக்காட்டியுள்ளேன்.....தவறாக கருத வேண்டாம்,
உங்கள் எழுத்தின் அழகை ரசிக்க விடாமல் தடுப்பது போன்ற உணர்வை இப்பிழைகள் ஏற்படுத்தியதால், சொல்ல விரும்பினே கார்த்திக்!!

Anonymous said...

I LUV U .....

Deivathai

Anonymous said...

Enna Saivathu.. en irandu udhadugalal unnaku oru
MUTTHAM ...
thanae thara mudiyum!

கார்த்திகேயன் . கருணாநிதி said...

// Divya Said,

என் கண்களில் தென்பட்ட எழுத்துப்பிழைகளை சுட்டிக்காட்டியுள்ளேன்.....தவறாக கருத வேண்டாம்,
உங்கள் எழுத்தின் அழகை ரசிக்க விடாமல் தடுப்பது போன்ற உணர்வை இப்பிழைகள் ஏற்படுத்தியதால், சொல்ல விரும்பினே கார்த்திக்!!
//

நன்றி திவ்யா, முடிந்தவரை எழுத்துப்பிழை
வராமல் எழுத முயல்கிறேன் !

அன்புடன்
கார்த்திகேயன்

கார்த்திகேயன் . கருணாநிதி said...

// Sivarama said...
Anbu Karthik,

Neengal ezhuthai muzhu nEra thozhilaaha vaithukkOLLalaam pOlum!(Naan solvadhai vaithu irukum vElayaivittu vidaatheerkaL!)
//

Thanks machan... mistake illama
type panna try panuranda....

thank you so much !

karthikeyan

கார்த்திகேயன் . கருணாநிதி said...

// Anonymous said...
I LUV U .....

Deivathai

Anonymous said...

Enna Saivathu.. en irandu udhadugalal unnaku oru
MUTTHAM ...
thanae thara mudiyum! //

Thanks Deivathaiya !!

with love
karthikeyan

ஜி said...

Meethi Nijamaa?? :(((

Nalla nadai...

கார்த்திகேயன் . கருணாநிதி said...

// ஜி said...
Meethi Nijamaa?? :(((

Nalla nadai...
//

ஆமாம் ஜி !!
வந்தமைக்கும் , வாழ்த்தியமைகும் நன்றி !

அன்புடன்
கருணாகார்த்திகேயன்