Monday, July 14, 2008

கண்ணாமூச்சி ஏனடி ??

எப்படி சொல்றது .. எங்கே ஆரமிப்பது.. 8 மாசத்துக்கு முன்னடி என்னோட நண்பன் S.K கூட ஊர்சுத்தும்போது அவள பார்த்தேன்.. ரொம்ப புடிச்சு இருந்தது.. ஒரு பத்து நிமிசம் பழக்கம்.. உடனே நான் அவளக்கு " ஐ லவ் யு னு " சொல்லிட்டேன்.. அவளுக்கும் என்ன ரொம்ப புடிச்சு இருந்தது...

தினமும் என்கூட பேசலைனா அவளுக்கு தூக்கமே வராது. அப்ப அப்ப சின்ன சண்டை போட்டாலும் இரவு 12 மணிவரைக்கும் பேசுர சுகமே தனிதான்.

அவளோட அழகான சினுங்கள்கூட என்னோட எந்த மாதிரியான தூக்கத்தையும் கலச்சிடும்.. அப்படி ஒரு காமகுரல் அவளோடது எவ்வளவு அழகா என்னை கூப்பிடுவா.... ஸ்ஸ்ஸ்.......

என்னோட காதோட அவ பேசுறது.. சட்டைக்குள்ள கூருகூருக்குறது எல்லாமே சுகம் .. ஒருவித அலுக்காத சுகம்..... அனுபவிச்சா தெரியும்... இப்பகூட அவளுக்கு புடிச்ச சட்டை பாக்கட்டை தொட்டு பார்க்கும்போது எங்கயோ மனசுஒரத்துல முத்தம் தந்த மாதிரி இருக்கு ...

நேத்துகூட அவளுக்கூட பேசினேன்.. கடைசியா ஒரு 12 மணிஇருக்கும்.. அழகா குட் நைட் சொல்லி முத்தம்கூட கொடுத்தா.. அப்பகூட தெரியாது அவ என்னைவிட்டு பிரிய போறானு..

காலைல 10 மணிக்குதான் தெரியவந்தது அவளை கானலைனு.. தெடாத இடம் இல்ல தெரிஞ்சவங்க, தெரியாதவங்கனு எல்லார்கிட்டையும் அவள்ளோட அடையாளத்தை சொல்லி விசாரிச்சேன், கடைசியா போலீஸ்லகூட புகார் குடுத்தாச்சு. ஆனால் கண்டுபிடிப்பது கஷ்டம்னு சொல்லிட்டாங்க...

அதுதான் எனக்கு தெரிஞ்சவழியில எல்லாருக்கும் தெரியப்படுத்துரேன்..

உங்களுக்கு இந்த அடையலத்துல இருக்குற என்னோட அவளப்பத்தி தெரிஞ்சா எனக்கு மறக்காம தெரியபடுத்தவும்.. நான் இல்லாம அவ தனியா தூங்ககூடமாட்டா

அடையாளம்
பெயர் : Samsung Thin ( SGH - C170)
பிறந்த தேதி : 07 - Aug 2007
சந்தித்த தேதி : 06 - Dec - 07
உயரம் : என்னோட பாக்கட்டுல பதுங்குற அளவு ..

அங்க அடையாளம்.. அதவேற உங்களுக்கு சொல்லனுமா ...

எந்த படுபாவியோ நான் கனவுல ஸ்ரேயாகூட பேசிக்கிட்டு இருக்கும்போது எவனோ அவன்பேசுரதுக்கு தனியாகிடந்த என்னோட செல் போனுக்கு அதரவு கூடுத்துட்டான் ....போகும்போது கொஞ்சம்கூட கூச்சபடாம செலவுக்கு என்னோட பர்சுல இருந்தே 500 ரூபாய் பணத்தவேற அடிச்சுட்டான்...

லவ்பன்ன பொண்ணு கிடைக்கதான் நமக்கு கூடுத்துவைக்கல.. Atleast லவ்பன்ன செல்-லாவது என்கூட இருக்கும்னு நினைச்சேன்....

இங்ககூட உன்னோட ராசி workout ஆகலையேடா கார்த்திகேயா ...

13 comments:

Hems said...

Fraud KK

Eppaiyum oru suspense....
But adha suspense ennanu munadiyae ennaku thaerijadhala ennaku romba pidichu irrudhuchu...

Puriyadhavagaluku romba suspensa irrukum

Hems

Ambika said...

Excellent Excellent.......!!!!!!

Nalla iruku nu solla call panna... Onga allu vera payannoda iruka..... Idhu nalla illa karthik.. Modhala alla mathunga...

lakshmi said...

good

அகரம்.அமுதா said...

படிக்கத் தூண்டும் படியாக மிக இயல்பாக எழுதி இறுதியில் முத்தாய்ப்பாய் முடித்துள்ளீர்கள். உங்கள் அவளை நானும் தேடுகிறேன். கிடைத்தால் கண்டிப்பாகக் கொடுத்துவிடுகிறேன். உங்கள் அவள் கிடைக்க வாழ்த்துகள்.

குறிப்பு:-
உங்கள் இடுகையில் அங்கங்கே சில சொற்களுக்குக் கால் ஒடிந்தும் சில சொற்கள் விதவையாகவும் இருக்கின்றன. கவனிக்கவும்

Divyapriya said...

எனக்கு முன்னாடியே தெரிஞ்சிருச்சு...ஆமா மெல்ல திறந்தது கதவு என்ன ஆச்சு??? கதவு ரொம்ப மெல்ல தான் திறக்குமா??? ;-)

Anonymous said...

Enna ithu ellam ....


Hmmmmmmm...

Samaya iruthuchu .. ..

Devathai..

வழிப்போக்கன் said...

அது எப்படிங்க நேத்துதான் கேட்டேன் இன்னிக்கு பதிவு போட்டுட்டீங்க..

ரொம்ப நன்றிங்க...

rapp said...

ஆஹா, கெளம்பிட்டீங்களா?? ஏங்க இந்த கொலைவெறி? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...........

Divya said...

Good try Karthik:)

விறுவிறுப்பு குறையாம கடைசிவரைக்கும் அழகா எழுதியிருக்கிறீங்க!!

Jayalakshmi said...

Paiyan Mattikittannu nenaithane....Kadaiselae....pavamayeetan....

Bharanidharan said...

Mama,

Un Allumbal Thaanga mudiyale....
mandai Kaanchitten po...
Superrbbbbb ...

Kirubakar said...

Machi superb..

Rams said...

Hi Karthick,

Epadi ma ithalam ...... starting la irukthu nalavan mariya bulid up kudukurathu..........

Oru mobile iruthuchuna ni shreya kita pesuviya athuvum kanavula

en jothika,nathiya ,tirisha number lam kadupidichu pesurathu thane