Wednesday, April 30, 2008

தியாகிகள் !!

இது சுதந்திர போராட்ட வீரரை பத்திய கட்டூரைனு நீங்க நினைச்சு படுச்சா அதுக்கு நான் பொருப்பு இல்லை. எல்லா company லையும் மனிதவளம் மைம்பாட்டூ துறையில் ( அதாங்க HR Department) ஒரு அங்கம்தான் இந்த HR Executive சுருக்கமா சொல்லுனும்முன "Consultant or Recruiter " இத பத்திய ஒரு கருத்து வெளிப்பாடு அவ்வளவு தான்.

எதாவது recruiter இந்த கட்டூரையை பார்க்கற துர்பக்கிய வாய்ப்பு அமஞ்சா உடனே கம்ப்யூட்டரை ShutDown பண்ணிட்டு ஒரு டம்ளர் தண்ணி குடிக்கவும்.
( கெட்ட கனவு கண்டா எங்க பாட்டி இப்படிதான் செய்ய சொல்வங்க!! )

எல்லா மனுஷனுக்கும் ஆசை இருக்கதான் செய்யும். ஆனா இப்படி "C&R" ஆகா இருக்குறதுக்கு நிறைய தியாக மனப்பான்மை தேவை என்பது எனது தனிப்பட்ட கருத்து. சக்கரை வியாதி உள்ளவங்ககிட்ட Sweet பத்தி பேசுறது , சராசரி வசதி உள்ள மானுஷாங்கிட்ட ராஜவாழ்க்கை சுகத்தை பத்தி அளக்கறது எவ்வளவு கொடுமையோ அதைவிட கொடுமை "C&R" ஆக வாழ்க்கை நடத்துவது.

என்ன பண்ணுறது இந்த இந்திய மகா கண்டத்துல வேலை தேடுற அத்தனை லட்சியவாதிகளேட வயசு, சம்பளம் மற்றும் இத்தியாதி, இத்தியாதி பார்க்கும் போது எல்லா " C&R" க்கும் 68டு வயசுல வரவேண்டிய BP, Heart Attack எல்லாம் 23னு வயசுலயே நிச்சியம். பெருமுச்சு விட்டே Office A/C செலவ ஏறவைக்குற அளவு உஷ்ணம்.

23னு வயசுல 15L , 20 L ( L என்றால் லட்சம் என்று கொள்க ) எல்லாம் சகஜம், ஆனா அவங்கள கண்டுபிடிக்கிற நம்ம So called "C & R" ரோட சம்பளம் என்னவோ 6K லிறுந்து 12K குள்ளதான். (K என்றால் ஆயிரம் என்று கொள்க ). ஒரு candidate ஐ அதாகப்பட்டது ஒரு தொழிலாளியை மார்க்கெட் இல் இருந்து எடுத்து company க்கு அனுப்பி select ஆகி , அவனுங்க சேர்ந்து ( இந்த நேரத்துல மானசுக்குள்ளையே உலகத்துள்ள எல்லா மாரியம்மனுக்கும் வேண்டிக்குவோம் எங்க Team Leader இக்கு மொட்டை போடுறோம்னு..).எப்போது இஞ்சி கடுச்ச மாதிரி ஒரு கடுப்பு உள்ளறா இருக்கும் ...

ரொம்பா பாவம் பண்ணது இதுலயும் பசாங்கதான். எப்போதும் போல Male / Male கூட்டணி இதுலயும் ஒத்துவராது. ஒரு பையனை நேர்முக தேர்வுக்கு அனுப்புறதுக்குள்ள மொத்த தாவும் தீர்ந்திடும். காதலிக்கும்போது கூட 8 போட்டுருக்க மாட்டோம். ஆனா ஒரு Candidate ஐ நேர்முக தேர்வுக்கு அனுப்புறதுக்கு தினமும் 11 னே போடனும். ( சுலபமா தெரிஞ்சா நல்ல Yamaha Bike எடுத்து 11 னு போட்டு பார்க்கவும்).

வாத்தியார்க்கு அடுத்து ஏணிப்படியா இருக்குற இந்த சமுதாயத்தை ( ஆமா Society க்கு சமுதாயம்னு தானே அர்த்தம் ?? ) தியாகினு சொல்வது பொருத்தமா இருக்கும் என்பது அடியேன் கருத்து.

7 comments:

Dhanya said...

This guy is filled with tonnes humour. Look at the flow..marvellous. A serious subject handled with a humourous touch..wow...

guru said...

கார்த்திக்,

கொஞ்சம் கஷ்டமா இருந்தாலும் இந்த blog மூலமாவது recruiter or consultant life எப்படி இருக்கும் என்று எல்லாரும் புரிந்து கொள்வார்கள் . படிக்கும் போது காமெடி a இருந்தாலும் படிச்சு முடிச்ச உடனே எங்கோ வலிக்கற மாதிரி இருக்கு.

இருந்தாலும் உன் ப்ளோக் சூப்பர் .

வாழ்த்துக்கள் ! :)

PATHROSE DOMINIC said...

Appreciate to handle this context this way. Sign of greats.

I did not have interest to read. But I am forced to comment on this.

What is written is not a joke but an agony of tonnes of employees (Recruiters.
Handled really well. Can't to fit a hold to this small description. Encourage you to write more. ....All the best.

Anonymous said...

Anne Innum neraya Ezhudhunga...
Senthil

Anonymous said...

Aridhu Aridhu Maanidanaai pirathal Aridhu, Adhanilum Aridhu Oru "Recruiter" raay Pirapadhu :-)

Bravo Karthik.......Kalakiteenga

Sukanya S Vinod

karunakarthikeyan said...

Thanks to Dhanya, Guru, pathrose, senthil, sukanya and kalpana....

karthikeyan

Bharanidharan said...

karthick,

Unmai unmai..
ithu namma boss kku forward pannalama?:)))
atleast salary yavathu koduppan itha padicha...