Friday, May 2, 2008

பச்சைகிளி முத்துசரம் !!

எப்போதும் போல எங்க அலுவலக canteen உணவை சாப்பிட்டு ஆடு முழுங்கின பாம்பு மாதிரி சாவகாசமா system முன்னாடி உட்காந்தேன்.

ஆன்டி தர சாப்பாட்டை 10 மாசம் சாப்பிட்டு நல்ல இருக்கற ஒரே ஜீவன் நான்னு ஒரு பாராட்டு விழா நடத்தலாம்னு இங்க பேச்சு, தலைமை அண்ணன் விவேக். ( இவரை பற்றி வேற ஒரு கட்டுரையில் காணலாம் )

எதாவது ஒரு Mail வந்து நம்ம அரை தூக்கத்தை கெடுக்கும். ஆனா இன்னைக்கு புதுசா ஒரு "Friend Request " வேற எதுல "Google Chat" ல தான்.. நான் எப்பேதும் தெரியாதவங்க கூட கடலை போடுறது இல்ல ( " Chatting னா கடலைனு அர்த்தம் : கருத்து உபயம் : அம்பிகா)

ஏன்னா ரஜனி சொல்ற மாதிரி நான் ரொம்ப Strict u, Strict u, Strict u, ஆனாலும் ஒரு சின்ன ஆர்வம், நமக்கும் கூட ஒரு "Friend Request " , யாருடானு பார்த்த ஒரு புது பெண்ணு. ( பெண்ணுணா பேயே இறங்கும்னு சொல்வாங்க, நான் வெறும் மனுஷன் தானே. என்ன பண்றது). நமக்குதான் யாரையும் இப்படி தெரியாதே, சரி நீங்க யாருனு ஒரு கேள்விதான் கேட்டேன்..

இப்படிதான் எல்லா கடலையும் ஆரம்பிக்குமா ?? தெரியாம கேட்கல, தெருங்சுக்கதான் கேட்டேன்..

இதுக்கப்புறம் மேட்டர் கொஞ்சம் சீரியஸ்.. முகம் தெரியாம , ஏன் குரல் கூட தெரியாம வெறும் திரை வார்த்தையை மட்டும் நம்பி வர இந்த அன்பு, பாசம், கடலை மற்றும், மற்றும்.... எல்லாம் ஏன் நேர்ல பார்த்து பேசி, பழகினாலும் வரமட்டங்குது.. தெரிஞ்சவங்க இருந்தா எனக்கு எழுதலாம்.. எங்க அப்பாவோட சொத்துல 10 சதவிதம் எழுதிவைக்கலாம்னு நினைக்கிறேன்.

நாங்க போட்ட கடலையை முழுசா தரனும்னுதான் ஆசை, ஆனா இரண்டு publicக்குள்ள நடந்த private விஷயம்ங்கறதால "Censored" ...

பச்சைகிளி முத்துசரம் படம் பார்த்து இருந்திங்கனா அதுல சரத்குமார் பேசுற ஒரு வசனம் வரும் அது மாதிரி....

Helloனு சொன்னா !
என்னேட Blog நல்ல இருக்குனா !
நல்ல சிரிக்க சிரிக்க பேசுறிங்கனா
என்னேட fanனு சொன்னா !
u stolen my Heartனு சொன்னா !
தப்பா நினைச்சுகாதிங்கனு சொன்னா !
நேர்ல பாக்கலாமானு கேட்டா !

பசங்க எல்லாம் எனக்கு மச்சம் இருக்குனு சொல்றங்க..
என்ன பண்றது வயசுசாகி போச்சேடா கார்த்திகேயா.....

2 comments:

Ambika said...

"--- நான் எப்பேதும் தெரியாதவங்க கூட கடலை போடுறது இல்ல ---"

"---poi poi---"

கருணாகார்த்திகேயன் said...

நீ மட்டும் விதிவிளக்கு அம்பி !

அன்புடன்
கார்த்திகேயன்