Tuesday, May 6, 2008

தி பாஸ் !

நம்ம வாழ்க்கையில நமக்கு தெரியாம நிறைய உயிர்களை வதைச்சிருக்கோம், ஏன் உயிர்பலிகூட குடுத்துருக்கோம். ஆனா அதுக்காக நாம எப்போதும் வருத்தபட்டதோ, வருத்தபடபோறதோ இல்லை. இது அந்த மாதிரி நாம முனியாண்டி விலாஸ்ல தின்ன சிக்கன் 65 ஜய பத்தியே, இல்ல தலப்பாகட்டுல முழுங்கின மட்டன் பிரியானிய பத்தினதோ இல்ல. ( சுவையா இருக்கும்றதால, நானும் பிரானிகளை
விரும்புகிறேன் !!)

சில சமயம் நமக்கு கிடைக்குற அதிகாரத்துனால, அல்லது பளு அதிகம் உள்ள
வேலைனாலோ நாம நமக்கு தெரியாமலே சில மனிதர்களோட உணர்வுகளை
அல்லது மனசை சுக்குநுறா உடைச்சி போட்டுறோம். அதுல என்னை ரொம்ப பாதிச்ச சில நிகழ்வுகள் இப்ப இருக்குற வேலையில நடந்தது. சமிபகாலமாக என்னால மனிதர்களை சுலபமா புரிஞ்சிக்கமுடியற காரணத்தால கூட இந்த நிகழ்வுகள் பெருசா என்னை பாதிச்சி இருக்கலாம். எப்படியோ பாதிப்பு அதிகம்றதால இத உங்களளோட பகிர்ந்துக்கிறேன்.

புதுசா கிடைக்கிற சட்டை, நகை, செருப்பு ( இதுல காதல் தனி, அது பத்தி தனியா எழுதுறேன் ) இது எல்லாம் மனுஷனை ஒரு புது வித பரவச நிலைக்கு கொன்டுபோயுடும். ஒரு சந்தோஷம், பெருமை எல்லாம் மனசுக்குள்ள 10 இக்கு 10 து அறையில சம்மணம்போட்டு உட்கார்ந்திடும். அது குடுக்கிற தைரியத்துல நாம ஆன்டவனுக்கு அடுத்ததா பாவிச்சு அடிக்கிற லுட்டி இருக்கே. ( போங்கடா நீங்களும் உங்க வேலையும்!)

இந்த உலகம் மற்றும் மனுஷ உறவுகள் எனக்கு கற்று தந்த பாடம் நிறைய. நாம எவ்வளவுதான் கஷ்டபடுத்தினாலும் ( அது தப்பே இல்லையுனு நினைப்புவேற ! ) ஏசு சொன்ன மாதிரி மறுகன்னத்தையும் காட்டுற மனசு சில பேருக்கு மட்டுமே. என்னோட வதைகளை எல்லாம் மறந்து (மன்னுச்சிடாங்களான்னு இன்னும் தெரியல ) என்னை சகமனுஷனா நினச்சு நேசகரம் நிட்டும்போது உள்ளாற உணருகின்ற அந்த வலி மட்டும் நிரந்திரம். என் ஆயுசுக்கும் !.

செஞ்ச பாவத்துக்கு நாம முகால்வசிபேருக்கு நரகலோகத்துல ( ஆமா நரகலோகத்துல சிகிரட், வோட்கா எல்லாம் கிடைக்குமா ??) கருடபுராண ஆலாபனை என்னவோ நிச்சியம். ஆனால் இது வரைக்கும் நமக்கு தெரியாத பக்கமா இருக்கிறதால அதுபத்தி யாரும் பெருசா கவலைபடுறது இல்லை. ஆனா அந்த சக மனுஷனை திரும்பி பார்க்கும்போது அந்த துன்பயியல் சம்பவம் மட்டும் மனசுல நங்கூரமிட்டு ஆடாமல் அசையாமல் நிக்கிது. அது தர வேதனை சொல்ல முடியாத துக்கத்தையும் கொடுக்குது.

ரொம்ப அழுகாச்சி மேட்டரா இருக்குனு கவலைப்பட்ட நீங்களும் மனசை சின்ன பின்னோட்டம் விட்டு பார்க்கவும். இன்னக்கி இரவு தூக்கத்தை தியாகம்பன்னுற நிலைமை வந்தாலும் ஆச்சரியம் இல்லை. அப்படியல்லாம் கிடையாதுனு தைரியமா சொன்ன புனிதர் பட்டத்துக்கு சிபாரிசு செய்யவேண்டியது என் கடமை. ( சிரிக்காதிங்க ஒரு பட்டம் 5 ரூவாதான் பிச்சுல ஒரு பையன்கிட்ட விசாரிச்சேன் )

சாத்தியமே இல்லையானாலும் Boss என்ற அதிகாரத்துல " சிலம்பரசன் படம் ஹிட்டானும்னு தனுசை அலகுகுத்தி, தீ மிதிக்க வைக்கவேன்டியது உன் பொறுப்புனு " இவனுக பன்னுற அழுச்சாட்டியம் மட்டும் குறையவே இல்லை. பின்குறிப்பு : நானும் ஒரு Boss தான் !

என்னோட வேளையுல சாத்தியப்பட்டது என்ற காரணத்துனால நிராயுதபானிமேல கத்திசுழட்டுன தவறும் நடந்ததது. கண்டிப்பா காயம்பட்டுருக்கும். ஏன்னா எனக்கும் நிறைய அனுபவம் காயத்துல !

எங்கயோ பிறந்து எப்படியே வளர்ந்து சகமனிதன் என்ற ஒரு சின்ன நூலுல நம்மள பினைச்சுக்குற அந்த சுகம் மட்டும் காதலைவிட பெருசுனு நான் நம்புறேன். ஆனால அதைகூட முழுசா காப்பாத்த முடியமா போகும்போதுதான் எங்கோ தப்பு இருக்குனு மனசுக்கு தெரியிது. ஆனா எங்க ஆரம்பிச்சு எப்படி முடியிதுனு தெரியாமல் போவது ஒரு துரதிஸ்டம்.

" மச்சான் Friendship மட்டும் இல்லேன்னா வாழ்க்கையில
எப்பவே நான் பைத்தியமாகியிருப்பேன்டா ! "

கல்லுரியில உணவகத்துல எப்பவோ நண்பன் சொன்ன வார்த்தைகள் இப்பவும் காதுல என்னை சுற்றி காத்துல ரீங்காரமிடுது. குழந்தையாகவே இருந்திருந்தா எவ்வளவு நல்லாருக்கும் !

கப்பல் கரையில் பாதுகாப்பாக இருக்கும் ஆனால்
அதுக்காக அது உருவாக்கப்படவில்லை
- ஆல்பர்ட் ஐயன்ஸ்டின்

நான் அதிகம் காயபடுத்தினதா நினைக்கின்ற sukanya மற்றும் Kalpana வுக்கும் மற்றும் என்னால் காயம்பட்ட அனைத்து இதயங்களுக்கும் இந்த கட்டுரை சமர்ப்பணம்.
அன்புடன்
கார்த்திகேயன்

8 comments:

Kalpana said...

Karthik.....Romba azhaga ezhudhi irukeenga. idha patha nalla anubavamana writer ezhudhina madri irukku. Each and every word shows that. And Karthik..Na ellathayum marandhutaen. ippo irukra Karthik enakku pudikkum. I saw the way you interacted with the ppl in Devi's reception. Nice and Keep it up...

Sukanya S Vinod said...

Hello Karthik........Neenga sonna maadhri yellam Yenna Kayapaduthala. Erundhalum mikka nandri :-) Nalla thiramai unga kita eruku Neenga Vaazkaila periya aala varuveenga :-) Vaazthukal

Anand (Muru) said...

Mr.Dai Karthik... can u pls translate ur writings in english as well, so that even i(and people like me who cant read tamil) can appreciate ur work.. anyways, from the comments i can sense u hav done a gr8 job.. this is a nice form of expression.. keep it up and keep ur thoughts flowing always :)

Divya said...

Wonderful flow of writing Karthik......just like that I crawled in to ur blog from ur comment in my page,
such an awesome skill u hv , the way u express watever u feel.....is really nice,

keep up ur gud work Karthik!!

Karthikeyan said...

divya said ,
//Wonderful flow of writing Karthik......just like that I crawled in to ur blog from ur comment in my page,
such an awesome skill u hv , the way u express watever u feel.....is really nice,//

thank you very much divya...
Its really nice to get such a comment
from the co-blogger....

Yours friendly
KarunaKarthikeyan

Karthikeyan said...

ரொம்ப நன்றி திவ்யா !
வந்தமைக்கு !

அன்புடன்
கருணாகார்த்திகேயன்

Anonymous said...

Chanceya illa ma.. Sairathu thappunu ninaikaruthukae oru paeriya manasu varanum athulayum mannippu kaetkarathuku atha vida romba .. eppadi solrathunu thaeriyala.. unkaluku thaan thaeriyum mae.. unnakaga saerthu vaitha varthaigal..........

Devathai...

ramya said...

Dear Karthick,

So sweet u are my dear.............

Nambala neriya per kayam patu irukanga nu ninachu athukha kavala padran manasu yarukum varathu

athu unaku kadhal kudutha gift ah ve nan pakuren

padika padika oru vithmana oru irupu unga eluthu mela

pls pls any cost dont stop writing this is my humble request