Thursday, May 15, 2008

அழகி !!

நமக்கு சில முகங்கள் மற்றும் உறவுகள் மேல இருக்குற அன்பும், பாசமும், சிலகாலம் கழித்து அதே உணர்வு இருக்கிறது இல்லை. உடனே இது அழகைபத்தி விவரிக்கிற எழுத்துனு நினைக்க வேண்டாம். இது ஆழ்மனசுல இருக்குற அன்பின் வெளிப்பாடாக நம் கண்களுக்கு அவர்களும், அவர்களது உறவுகளும் அழகாக தெரிவது பற்றிய எழுத்து.

மனசு இளமையா இருக்குறது ஒரு வரம்தானே ! எல்லேருக்கும் வயசும் இளமையும் போரப்ப ஒரு தவிப்பு , தாழ்உனர்வு வரும்தானே ? ஒரு ஆறு மாசத்துக்கு முன்னாடி எனது நண்பன் ஒருவன் கல்யாண பத்திரிக்கை கொடுக்கும்போதுதான் நம்மளுக்கும் வயசாகுதுன்னு லேசா புரியவந்தது. வயசும் வருசமும் எவ்வளவு வேகமா ஓடுது..

எல்லாத்துக்கும், எல்லோருக்கும் ஒரு முதிர்ச்சி, தேவைபடுது ! ஆனா எதை பொருத்ததுனு ஒரு குழப்பம் எனக்கு இருக்கு... ரொம்பநாளா... அதே சமயம் நமக்கும் மட்டும் இல்லை நம்மோடு வாழ்க்கையில் பயணபடுகிற எல்லோருக்கும் இதே மாதிரியான உனர்வு வருவதும் சகஜம். என் பயணத்துல நான் பார்க்கிற, பார்த்துக்கொண்டு இருக்குற சில பேரு மட்டும் இன்னும் இளமையா, அழகியாகவே தோண்றுவது எதனாலைன்னு புரியவே இல்லை !!

அந்தமாதிரி என் வாழ்க்கையில் பயணித்துகொண்டு இருக்கும் ஒரு அழகி ஆமாம்... என் கண்களுக்கு என்றேன்டும் அழகியாக.. என்னோட தலைகோதி, நெத்தியில் முத்தம்குடுத்து நான்மட்டும் இந்த உலகத்துல அழகுனு சொல்ற சில பேருல இந்த அழகி முதன்மையானவள்.. என்ன காரணம்னு கேட்காதிங்க ஏன்னா தனக்கு சொந்தம்னு நினைக்கற பொருள்மேல எல்லோருக்கும் இருக்குற வாஞ்சையும், பாசபரிவும் அவளுக்கும் இருக்கும்றது தின்மம்.

சிலபேர காதலிப்பதும், சிலபேரல காதலிக்கப்படுவதும் மனசுக்குள்ள என்றைக்கும், எதையோ வெற்றிகொண்டதுக்கு இடான குதுகலத்தை தருவது நான் உனர்ந்த அழகான விஷயம் அந்த அழகியிடம்..

அன்புக்கும் உன்டோ அடைக்குந்தாழ் ..

இந்த குறள் படிச்சி இருக்கிங்களா ! இல்லேன்னா ஒரு தடவை படிச்சு பாருங்க. மனசுக்குள்ள எதையோ அசைச்சு பார்க்குற வலிமை இந்த குறளுக்கு உண்டு. நாம இந்த மாதிரியான சராசரி உணர்வகூட ஒதிக்கிட்டு எதையே தேடி அலையிறேம். ஆனா எதுக்காக அலையிறேம்னு நமக்கு தெரியுமா ? யோசிச்சு பாருங்க ! ஏன்னா எதை நோக்கி ஒடுறோம்னு தெரியாத, இலக்கு இல்லாத ஓட்டம் எதையும் நமக்கு குடுக்காது !

வாழ்கையில நிறைய அனுபவம் உள்ளவங்ககிட்ட நம்மோட சந்தேகத்தை கேட்கும்போது நமக்கு கிடைகிற விளக்கங்கள் நாம வாழ்ந்து அனுபவிக்கிறதுக்கு இடானது. எனக்குகூட சில சமயம் வருகிற சந்தேகத்துக்கு ஒரு முன்றாம் பார்வை தேவைபடுது. எல்லாரும் சொல்லுகிற கருத்தை நாம கேட்டாலும் மனசுக்கு போறது சில பேரோட வார்த்தைகள்தான். அப்படி எனது மனசுக்கு சொல்ற கருத்தா எடுத்துபது இந்த அழகியோட வார்த்தைகள்.

இந்த மாதிரி சில ஆழமான உறவுகள் மட்டும் இல்லேன்னா நான் எப்போதே திசைமாறி போயிருப்பேன். சொல்லமுடியாது பைத்தியமாககூட ஆகியிருப்பேன்.

இது மாதிரியான ஆழமான உறவுகளை தேடிய எனது பயணம் இன்னும் விரியம் அடங்சியிறுக்குனு மட்டும் என்னால உணரமுடியுது. ஆனால் இருக்கிற உறவுகளில் சிலது மட்டும் இன்னும் மனசுல வானலவு விஸ்வருபம் எடுத்து நிற்கும் போது அதை தாண்டிய தேடல் கொஞ்சம் கஷ்டம்தான். இருந்தலும் உறவுகளை தேடி, தேடி அலைந்து தோல்வி அடையிம்போது சிறுபிள்ளை மாதிரி திரும்பி ஓடிவந்து அழ ஒரு மடி தேவைபடும். எனக்கான மடி இந்த அழகியிடம்.

எனக்கு விரல் புடுச்சு அ ஆ சொல்லிகொடுத்து, எனக்கு வாழ்கையை பத்திய புரிதலையும் உணரவச்ச எனது அம்மா அறிவழகிக்கு இந்த கட்டுரை....

இது அன்னையர் தினத்துக்கான கட்டுரை அல்ல ..
எனக்கு இந்த தினங்களின் மீது நம்பிக்கையும் இல்லை !!

18 comments:

Kalpana R said...

Hi Karthik,
Superbb.....really na adha padikum bodhu, yaro ungaloda pazhagina oru ponna ponna pathi dhan soreengalonu nenachaen. But Superb...No words to say. What u said is right. Ellar manasulayum irukradha neenga ezhudhi kaati irukeenga.First...just like that nu padichaen but last la pathuttu marubadiyum poi padichu pathaen.And mudicha vidhamum super. neenga ezhudhinadhula idhukku dhan 1st prize... :)

karunakarthikeyan said...

Thanks a don kalpana...

Because of you people i am looking the world in the different eyes !!!

with love
karthikeyan

ரசிகன் said...

//நண்பன் ஒருவன் கல்யாண பத்திரிக்கை கொடுக்கும்போதுதான் நம்மளுக்கும் வயசாகுதுன்னு லேசா புரியவந்தது. வயசும் வருசமும் எவ்வளவு வேகமா ஓடுது..//

சேம் பிளட்:))

ரசிகன் said...

//சில சமயம் வருகிற சந்தேகத்துக்கு ஒரு முன்றாம் பார்வை தேவைபடுது. எல்லாரும் சொல்லுகிற கருத்தை நாம கேட்டாலும் மனசுக்கு போறது சில பேரோட வார்த்தைகள்தான்.?//

உண்மைதான்:)

Karthikeyan said...

ரொம்ப நன்றி ஸ்ரீ !
படித்தமைக்கு !

அன்புடன்
கருணகார்த்திகேயன்

senthil said...

"அன்புக்கும் உன்டோ அடைக்குந்தாழ் .."
First time Thirukurala use panni irukeenga. Oru kuraluke manase asaikura powerna, Miccham irukura kuralukellam enna power irukem.

Nice blog.

Karthikeyan said...

எல்லா குறளுக்கும் அதே திறன் உண்டு செந்தில்..

நன்றி படித்தமைக்கு !

அன்புடன்
கருணகார்த்திகேயன்

Revathi said...

Hey Karthik anna.. that was awesome.. :))

Karthikeyan said...

நன்றி தேவதையே !!
அன்புடன்
கருணகார்த்திகேயன்

Anonymous said...

Karthik,
Really nice....
Amma pathi yaeludhuringanu thaeriyavae illa...
Romba alaga varunichu irrukinga...
Varithai Illai Ungal Katturaiya Varunika....

With Love
Hemalakshi Sekar

Karthikeyan said...

நன்றிகள் கோடி Hemalakshi Sekar !!

அன்புடன்
கருணகார்த்திகேயன்

Divya said...

Nice......really nice!

\\அந்தமாதிரி என் வாழ்க்கையில் பயணித்துகொண்டு இருக்கும் ஒரு அழகி ஆமாம்... என் கண்களுக்கு என்றேன்டும் அழகியாக.. என்னோட தலைகோதி, நெத்தியில் முத்தம்குடுத்து நான்மட்டும் இந்த உலகத்துல அழகுனு சொல்ற சில பேருல இந்த அழகி முதன்மையானவள்.. \\

Superb skill of writing u hv, keep writing Karthik!!

Divya said...

BTW.....thx for visiting my blog:))

Bharanidharan said...

Hi Karthick,

Chance illa ponga...
Vaarthaigal illa unnai vaazthi pesa...
Kangal kalangadithu vitta nanba...
Feel to cry...
Amma anbu athu onnu thaan intha ulagil namakku irukkum ore unmaiyana sothu....
Really i dont know how to wish u by words...
Uravugalai patri solla nee 100 aandugal needuzhi vazha vendugiren aandavanai...

கார்த்திகேயன் . கருணாநிதி said...

// Bharanidharan said...
Hi Karthick,

Chance illa ponga...
Vaarthaigal illa unnai vaazthi pesa...
Kangal kalangadithu vitta nanba...
Feel to cry... //

அதுதான் அன்பு மாம்ஸ் !
மிக்க நன்றி
அன்புடன்
கார்த்திகேயன்

Anonymous said...

Ithu madri ungalala mattum thaan ma think panna mudiyum.. Simply superb dear..Devathai

கார்த்திகேயன் . கருணாநிதி said...

// Anonymous said...
Ithu madri ungalala mattum thaan ma think panna mudiyum.. Simply superb dear..

Devathai //

மிக்க நன்றி ..

அன்புடன்
கார்த்திகேயன்

அன்புடன் அருணா said...

அழகியைப் பற்றியரொம்ப அழகான பதிவு.
அன்புடன் அருணா