கண்டார் மகிழ் செய்தல் இன்று.
" மது கூட உண்டவரைத் தான் மகிழ்விக்கும். ஆனால் கண்டவுடனே மகிழ்ச்சியைத் தருவது காதல் மட்டுமே. "
ஜன்னல் வழியாக தெரிந்த வானம் இன்று புதிதாய் தெரிந்தது எனக்கு, படுக்கையை விட்டு எழாமல் புரண்டு புரண்டு படுத்தும் தூக்கம் முழுமையாக வரவுமில்லை, விலகவுமில்லை. வீட்டு அடுப்படியில் இருந்து அம்மா கூப்பிடும் சத்தம் காதில் விழுந்தும் கனவில் கேட்பது போல் இருந்தது.
டேய் ஜான், ஜான்.. இன்னும் என்னாட தூக்கம் ! மணி ஏழுஆகுது பார் ! எழுந்துரு..
ஏழு மணிக்கு மேல தூங்கினா அம்மாவுக்கு புடிக்காது.. அப்பாவுக்கும்தான்.. ஆனா இன்னைக்கு என்னமோ மனசு துடிப்பா இருந்தாலும், உடம்பு என்னவோ அசதியா இருக்கு.. எல்லாம் நேத்து அடிச்ச ட்ரிங்க்ஸ்தான் காரணம் ... வீகேண்ட் ஆச்சே !!
இதோ எழுந்துட்டேன்மா ! எப்ப பார்த்தாலும் திட்டுதானா ? ஒரு நாள் நிம்மதியா தூங்கவிட மாட்டியே..
அதுதான் தினமும் பத்துமணி ஆபிஸுக்கு ஒன்பது மணிக்குதான் கிளம்பிபோற.. இன்னைகாவது கொஞ்சம் சீக்கிரம் எழுந்துருக்ககூடாதா ??
லிவுதானேமா இன்னைக்கு ! அப்புறம் ஏம்மா ??
யேசப்பாவே ! இரண்டுநாளா படிச்சு படிச்சி சொல்லிருக்கேன், அதுக்குள்ள மறந்துட்ட வர வர பொறுப்பே இல்லடா உனக்கு..
ஆங்.. இப்பதான் ஞாபகம்வருது போனவரம் முழுசா பொண்ணு போட்டா காட்டி பண்ன தொல்லை இருக்கே.. அப்பாடா ! பொண்ணு பேரு.. பேரு ஆங் தேவின்னு சொன்னதா ஞாபகம், நல்ல அழகா, குண்டா, அப்புறம் நல்ல சிரிப்பும்கூட..
என்னை பத்தி சொல்ல மறந்துட்டேனே, வயசு 28, சுமாரான உயரம், சுமாரான கலர், பெண்களுக்கு புடிக்குற எல்லா குணமும் இருக்கிறதா பக்கத்து டேபிள் பொண்ணு சொன்னா.. சுருக்கமா சொல்லும்னா கல்யானம் செய்ய தகுதியான தமிழ்நாட்டு பையன்.
இதுக்கு முன்னாடி கூட நிறைய போட்டோ பார்த்துருக்கேன்.. எல்லாமே எதோ ஒரு விதத்துல மனசு ஒட்டல, ஆனா இந்த பொண்ணு வேனானு சொல்ல எந்த காரணமும் இல்லைங்கறதால சரி போலாம்னு ஒத்துகிட்டேன்.. ஆனா அது இன்னைக்குனு ஞாபகம் இல்லை...
ஜான்........ ஜான்....
இதோ வந்துட்டேன்மா.. ஆமா எத்தனை மணிக்கு போகணும்..
எதாவது வாங்கிட்டு போகணுமா என்ன ?
ஒன்னும் வேணாம்.. 11 மணிக்கு வீட்டவிட்டு கிளம்பனும்...
ஒரு 12 மணிக்கு அங்க போயிட்ட அப்புறம்தான் மத்தது எல்லாம்.
மத்தது எல்லாம்னா ?
ஒன்னும் இல்லடா .. கிளம்பு முதல்ல..
அம்மாவுக்கு எல்லாமே அவசரம்தான் .... நான் அதுக்கு நேர்எதிர்.. எனக்கு அமைதியா, அழகா, கவிதை மாதரி வேனும் எல்லாமே...
பாகம் - 1 - காதல் தொடரும் ...
14 comments:
தொடரின் ஆரம்பமே அசத்தலா இருக்கு,
அடுத்த பகுதிக்காக வெயிட்டிங்:))
\மத்தது எல்லாம்னா ?
ஒன்னும் இல்லடா .. கிளம்பு முதல்ல..\\
இதில் தான் ஏதோ டிவிஸ்ட் இருக்கும்னு தோனுது!
\\யேசப்பாவே ! இரண்டுநாளா படிச்சு படிச்சி சொல்லிருக்கேன், அதுக்குள்ள மறந்துட்ட வர வர பொறுப்பே இல்லடா உனக்கு..\\
உரையாடல்கள் ரொம்ப யதார்த்தமா இருக்கு கார்த்திக்!
Romba nalla starting ma.. etho romba casuala.. nalla irruku ma..
Devathai..
கதை நல்லா ஆரம்பிச்சிருக்கு. வாழ்த்துக்கள்.தொடருங்க:)
//Divya said...
தொடரின் ஆரம்பமே அசத்தலா இருக்கு,
அடுத்த பகுதிக்காக வெயிட்டிங்:))
//
ரொம்ப நன்றி திவ்யா..
மிக விரைவில் ...
அன்புடன்
கார்த்திகேயன்
// Divya said...
\மத்தது எல்லாம்னா ?
ஒன்னும் இல்லடா .. கிளம்பு முதல்ல..\\
இதில் தான் ஏதோ டிவிஸ்ட் இருக்கும்னு தோனுது!
//
இது வரைக்கும் அப்படி யோசிக்கவில்லை..
இப்போது யோசிக்கிறேன்...
அன்புடன்
கார்த்திகேயன்
//Davathai said...
Romba nalla starting ma.. etho romba casuala.. nalla irruku ma..
Devathai.. //
காதல பத்திய கதை..
நல்ல இருக்கும்னு நினைக்கிறேன்...
நன்றி தேவதையே !
அன்புடன்
கார்த்திகேயன்
// ரசிகன் said...
கதை நல்லா ஆரம்பிச்சிருக்கு. வாழ்த்துக்கள்.தொடருங்க:)
//
என்ன ரசிகன் , ஆளயே கானோம்... ??
வந்தமைக்கும், வாழ்த்தியமைக்கும் நன்றி ..
அன்புடன்
கார்த்திகேயன்
Wonderful start,
flow is very nice.
waiting for the next part:)
//
Shwetha Robert said...
Wonderful start,
flow is very nice.
waiting for the next part:)
//
ரொம்ப நன்றி swetha.
மிக விரைவில் ...
அன்புடன்
கார்த்திகேயன்
Directaa kalyanathukku poyittu.. kaathal thodarumaa??
hmmm... first aarambikkattum.. appuram thodarattum :)))
// ஜி said...
Directaa kalyanathukku poyittu.. kaathal thodarumaa??
hmmm... first aarambikkattum.. appuram thodarattum :)))
//
எல்லாமே காதல்தான் ஜி !!
போனாபோகுது சின்னசிருசுங்க...
விட்டுடலாம் !!
வந்தமைக்கும் , வாழ்த்தியமைகும் நன்றி !
அன்புடன்
கருணாகார்த்திகேயன்
கார்த்திக்,
எப்போ அடுத்த பார்ட்??
ஜரூர்.......ஜரூர்:))
Post a Comment