Tuesday, March 24, 2009

சிவா மனசுல கார்த்திக் ????

வாழ்கையில சில பெண்கள் மட்டும் முழுசா மனச ஆக்கிரமிக்றாங்க... எவ்வளவு யோசிச்சாலும் எப்படினு கண்டுபிடிக்க முடியல ... இந்த கடைசி 5 மாசமா என்னை முழுசா ஒரு பொண்ணு பைத்தியாமாக்கிட்டா..

சுருக்கமா சொல்லனும்னா வெயில் காலத்துல வர சின்ன நிழல் மாதிரி எவ்வளவு அனல் இருந்தாலும் அந்த குளுமைக்கு மனசு எங்குமே அப்படி ஒரு பொண்ணு

எல்லா காதலையும் கண்ணுல மறச்சு, வார்த்தையால கொல்லுறது எப்படினு போட்டி வச்சா இவங்களுக்குதான் முதல் பரிசு... அவ்வளவு நல்லவங்க !!

இவங்க கிட்ட " ஐ லவ் யு" சொன்னா ஒன்னு " சரி " இல்லை "முடியாதுனு" சொல்லனும் அதவிட்டுட்டு இவுங்க பண்ண "அட்வஸ்ல" அந்த பையன் ஓட்டல்ல 3 நாள் ரூம் போட்டு அழுதுட்டு பாதிரியாரா மாறிட்டான்.

நானும் இந்த 5 மாசமா 8, 11 எல்லாம் போட்டு காட்டி ஒரு வழியா கொஞ்சம் நெருக்கமானதுக்கப்புறம்.. ஒரு நல்ல நேரம் பார்த்து "ரொமட்டிக் நைட்னு" சொல்லுவாங்கள்ல அப்படி ஒரு நேரம்..

அழகா ஒரு ரோஸ் கொடுத்து

ஸ்வீட்டி உன்ன லவ் பண்ணுறேன்..
கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசைபடுறேன்...

" உன்ன லவ் பண்ணத்துக்காக இல்ல.. இன்னும் லவ் பண்றதுக்காக"

அப்படினு சொன்னா.... அதுக்கு அவ சிம்ப்புலா... கார்த்திக். இந்த 12பி பஸ் தெனாம்பேட்டை வழியா போகுமானு .......

அந்த சோகத்துல நான் அழறத பார்த்துட்டு "காதலர் சங்கத்துல" இருந்துகூட வக்கில் நோட்டிஸ் அனுப்பினாங்க... ஆனாலும் ரிசல்ட் என்னமோ நான் 8த் கணக்கு பரிட்சைல எடுத்த மார்க்கு "O" தான்.

அதனால இந்த பிலகு கூரும் நல்லுலகத்தை வேண்டுவது என்னனா.. என்னொட இரண்டவது இன்னிங்க்சும், காதலும் ஜெ.ஜெனு இருக்க இந்த கருணவை வாழ்த்துமாறு கேட்டுக்கிறேன்.

ஊருக்கே எப்படியேல்லாம் காதலிக்கறதுனு சொன்ன எனக்கு இப்ப ஒரு ஐடியா கூட வர மாட்டங்குது... ஒபனிங்க் நல்லதான் இருக்குது... பினிசிங்கு சரியா இல்லைப்பா....

விதி வலியதுனு எல்லாரும் சொன்னப்போது கூட நான் நம்பல... ஆனா எனக்குனு இப்படி ஒரு நிலைமை வந்தாப்புறம்தான் அது உன்மைனு தெரிச்சுக்கிட்டேன்..

நானும் காதலில் விழுந்தேன் !

12 comments:

Anonymous said...

ஒபனிங்க் நல்லதான் இருக்குது... பினிசிங்கு சரியா இல்லைப்பா....

starting la ennamo solla varinga nu nenaicha.... but...

Purinjavangaluku adhoda vali enna nu thaeriyum... Puriyahdavangaluku kadha madhri dhan thaeriyum...

Ennala unga valiya purinjikamudiyudhu....

Ambika said...

Hey yera patti inda katturai pa....?

Ambika said...

நானும் காதலில் விழுந்தேன் !..... Nannum 1000 ma vadu murai kadali vilundhane.... idhu thane correct anna statement......

கார்த்திகேயன். கருணாநிதி said...

// Anonymous said...
ஒபனிங்க் நல்லதான் இருக்குது... பினிசிங்கு சரியா இல்லைப்பா....//

ரொம்ப நன்றி ...

ரொம்ப நாள்லுக்கப்புறம் எழுதுற கட்டுரை அதனால்தான் ..

அன்புடன்
கருணாகார்த்திகேயன்

Anonymous said...

romba nal kalichu yaeludhuringa... nalla romantica yaeludha kudadha.. yen sogama yaeludhi irrukinga....

கார்த்திகேயன். கருணாநிதி said...

// Ambika said...
நானும் காதலில் விழுந்தேன் !..... Nannum 1000 ma vadu murai kadali vilundhane.... idhu thane correct anna statement......//


சிவா பத்தி...1000 முறை இல்ல ஜஸ்ட் 23வது முறைதான்

அன்புடன்

கருணா கார்த்திகேயன்

Thamizhmaangani said...

//ஊருக்கே எப்படியேல்லாம் காதலிக்கறதுனு சொன்ன எனக்கு இப்ப ஒரு ஐடியா கூட வர மாட்டங்குது//

இது ரொம்ப ஈசிங்க..
லவ் பண்ற பொண்ணுகிட்ட போய் நான் ஒரு பொண்ண காதலிக்கிறேன்னு சொல்லி பாருங்க. அவங்க முகத்துல ஒரு பரபரப்பு கலந்த வருத்தம் தெரிந்தால், "என்னைய விட்டுடு யாரடா பாக்குற" என்று அர்த்தம். பொண்ணும் உங்கள லவ் பண்ணுது அர்த்தம்.

அத விட்டுபுட்டு, ஒன்னுமே தெரியாம இருந்துச்சுன்னா, அந்த புள்ள பாவம்! உங்க லவ் இன்னும் அவள போய் ரீச் பண்ணலன்னு அர்த்தம்.

கார்த்திகேயன். கருணாநிதி said...

// Thamizhmaangani said...

இது ரொம்ப ஈசிங்க..
லவ் பண்ற பொண்ணுகிட்ட போய் நான் ஒரு பொண்ண காதலிக்கிறேன்னு சொல்லி பாருங்க. அவங்க முகத்துல ஒரு பரபரப்பு கலந்த வருத்தம் தெரிந்தால், "என்னைய விட்டுடு யாரடா பாக்குற" என்று அர்த்தம். பொண்ணும் உங்கள லவ் பண்ணுது அர்த்தம்.

அத விட்டுபுட்டு, ஒன்னுமே தெரியாம இருந்துச்சுன்னா, அந்த புள்ள பாவம்! உங்க லவ் இன்னும் அவள போய் ரீச் பண்ணலன்னு அர்த்தம்.
//

நீங்க வேற அதல்லாம் ட்ரை பண்ணியாச்சு...
புதுசா எதாவது இருந்தா சொல்லுங்க..

அன்புடன்
கருணா கார்த்திகேயன்

Divyapriya said...

billa range க்கு opening குடுக்கறீங்க :))

Anonymous said...

ஹேய்! சிவா பேர காப்பாத்து!! கதைக்காக சும்மா ரீல் விட்டீனா அப்புறம் வீட்டுல அப்ளாக்கட்ட தான்..
வாழ்த்துக்கள் !! வளருங்கள் !

கார்த்திகேயன். கருணாநிதி said...

// Divyapriya said...
billa range க்கு opening குடுக்கறீங்க :))//

ஹாய் திவ்யா..
நல்ல இருக்கிங்களா..

ரொம்ப நன்றி ... வந்தமைக்கு ..

அன்புடன்
கருணா கார்த்திகேயன்

கார்த்திகேயன். கருணாநிதி said...

// Anonymous said...
ஹேய்! சிவா பேர காப்பாத்து!! கதைக்காக சும்மா ரீல் விட்டீனா அப்புறம் வீட்டுல அப்ளாக்கட்ட தான்..
வாழ்த்துக்கள் !! வளருங்கள் ! //

ரொம்ப நன்றி ... வாழ்த்துக்கு

அன்புடன்
கருணா கார்த்திகேயன்