Monday, July 19, 2010

மீன் கொழம்பு..

எப்போதும் போல அவசர அவசரமா அலுவலகத்துக்கு கிளம்பிட்டு இருந்தேன். 8 மணிக்குள்ள ரயில் ஏறினாதான் சரியான நேரத்துக்கு அலுவலகம் போக முடியும். இந்த அவசரத்துல நான் எதையும் கவனிக்க உன்டான நேரம் ரொம்ப குறைவு.

ம்ம்ம்ம்ம்....

என்ணோட மனைவியோட குரல். என்னை கூப்பிடுறாங்கனு அர்த்தம். இந்த 1 1/2 வருசத்துல ம்ம்ம்.. க்கும்ம்.. இப்படினு ஒரு 10ல இருந்து 15 வகை கேட்டு இருக்கேன். ஒவ்வொன்னுக்கும் ஒரு அர்த்தம்னு கண்டுப்பிடிக்கிறதுக்குள்ள... சரி அதவிடுங்க. இதபத்தி எழுதனும்னு ஆரம்பிச்சா மொத்த தலைப்பையே மாத்தியாகனும்.

என்ன ? ( இது நான் !)

ஊர்லேந்து கெஸ்ட் வராங்க..இப்பதான் போன் வந்தது..

சரி.. அதல்லாம் நீயே பார்த்துக்கோ.. சாய்ந்திரம் நான் வந்ததுக்கப்புறம் மத்தத பார்த்துக்கலாம்..

சரி .

வீட்டு மாடிபடி இறங்கும்போதுதான் ஒரு விஷயம் ஞாபகம் வந்தது.. இந்த வீட்டுக்கு வந்து இரண்டு வாரம் தான் ஆகுது.
இப்பதான் முதல் முறையா எல்லாரும் வராங்க. எதாவது அசைவம் வாங்கி சமைச்சா நல்லா இருக்கும்னு நினைச்சேன்.
நேரம் இல்லாதனால ஒரு ஆட்டோ பிடிச்சு இரண்டு கிலோமிட்டர் துரத்துல உள்ள மார்க்கட்டுல மீன் வாங்கிட்டு வீட்டுக்கு போன் பன்னினேன்.

ம்ம்ம்ம்...

நான் ஆட்டோல வீட்டுக்கு வந்துட்டு இருக்கேன். கொஞ்சம் கேட்டுக்கு வெளிய வந்து நிக்கிறியா...?

எதுக்கு ?

எதுக்கா..?

சரி வரேன்...

அவுங்க கேட்டுக்கு வரவும் நான் வீட்டுக்கு வரவும் சரியா இருந்துச்சு. 2 கிலோ மீனை கையில கொடுத்தேன்.

வாங்கிட்டு ஒரு கேள்வி கூறி பார்வை..

என்ன இது..? ( அப்படினு நானே நினைச்சிக்கிட்டேன்.. வேற என்ன கேள்வி இங்க பொருத்தமா இருக்கும்னு எனக்கு தெரியல..)

சொந்தகாரங்க வீட்டுக்கு வராங்கனு சொன்னல்ல.. அதுதான் மீன் வாங்கிட்டு வந்தேன்.. பாதி கொழம்பு வச்சி மீதிய வறுத்து வையி..

சரி...... பன்னுறேன்...... அப்படினு எந்த ஒரு வார்த்தையும் இல்ல.. ஆனா முகத்துல அதிர்ச்சியும், ஆச்சர்யமும் இருந்தது.

எனக்கு உள்ளுக்குள்ள கொஞ்சம் பெருமை, சொந்தகாரங்க வராங்கனுதும் எப்படி பொருப்பா மீன் வங்கிட்டு வந்துட்டேனு முகத்துல அதிர்ச்சி, ஆச்சர்யம் போலனு..

அவசரமா திரும்பி ஆட்டோல ஏறப்போன ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் காதுக்குள்ள அடிச்ச மாதிரி ஒரு வார்த்தை.. இருந்தாலும் ஒரு சந்தேகத்தோட பாதி திரும்பின மாதிரி ஆட்டோல ஏறப்போன..

மாமா...

அதிர்ச்சியும், ஆச்சர்யமும் இப்போ என்னோட முகத்துல. இப்படி என்ன யாரும் கூப்பிட்டது இல்லை.. அதுமட்டும் இல்ல இவங்க என்னை " எப்படியும் " கூப்பிட்டது இல்லை..

அந்த அ, ஆ எதுவும் மாறாம பக்கத்துல போயி என்ன விஷயம்னு கேட்டா..

மாமா... எனக்கு மீன் கொழம்பு.........

இதுக்கப்புறம் நடந்தது எல்லாம் மகா, மெகா அதிர்ச்சியான சம்பவங்கள்..

வந்த விருந்தாளிங்க எல்லாம் நல்ல மீன் கொழம்பு, ரசம்னு சாப்பிட்டு மறுநாள்தான் போனங்க..

ஆனா ஒரு விஷயம் மட்டும் புரியவே இல்லை.. மறுநாள் நல்லபடியா ஊர்போய் செந்தாங்களா.. நல்லா இருக்கிங்களானு தெரிஞ்சிக்க போன் பன்னா எடுக்கவே மாட்றாங்கா..

தென்னாலிராமன் " பூனை பால் கதையா இருக்குமோ...."

4 comments:

manjoorraja said...

ஆசை ஆசையா மீன் குழம்பு எப்படி செஞ்சிக்கலாம்னு கத்துக்க வந்தா...... உம்மை என்ன செஞ்சால் தகும்?


ஆனா அந்த மா........மா வில் இருக்கும் கிக்கிலெயே நீர் மயங்கி போயிருப்பீர்....ம்ம்ம் உம்மை சொல்லியும் குற்றமில்லை.....

நடக்கட்டும் நடக்கட்டும். :)(நம்ம வீட்டிலெயும் அதே கதை தானே!)

Kalpana said...

:) :) :) Meen kuzhambu romba nalla irundhuchu :) :) :)

KIRUBA said...

Thambi! Naan veetukku varalamnu irunthen! nalla velai, 'meen kozhambu' mudivai mathiduchu..
Gud..write more..

து. பவனேஸ்வரி said...

எனக்கும் மீன் குழம்பு வேண்டும். கிடைக்குமா?