Saturday, June 25, 2011

கொஞ்சம் பெரிய பின்னுட்டம் -2

தேடல்
தேடல்கூட ஒருவிதமான இச்சையா அல்லது காதல் போல அதுவும் ஒரு உணர்வா ??

ஒவ்வருவருக்கும் ஒரு விதமான தேடல்கள் கண்டிப்பா இருக்கும்.

கற்றல் நிற்கும் பொழுது முன்னேற்றம் தடைபடுவது போல , தேடல்கள் குறையும்பொழுது நமது வாழ்வியல் சார்ந்த வளர்ச்சியும் கொஞ்ச கொஞ்சமா நின்றுவிடும் என்பது என் கருத்து.

எதை நோக்கிய தேடல் ஆரோக்கியமானது ..? அது இன்றும் விவாதத்துக்கு உரியது..

தேடல்கள் நல்லதா , கெட்டதா ? அது அவரவர் கண்ணோட்டத்தை பொருத்தது..

மொத்தத்துல தேடல்களால் மட்டுமே ஒருவரை புதுபிக்க முடியுமங்குறது எனது ஆழ்ந்த நம்பிக்கை..

தேடல் பத்தியும் அதோட சாரம்சம் பத்தியும் அதிகம் பதிவு செய்யும் எழுத்தாளர்களில் எழுத்தாளர் திரு.எஸ். ராமகிருஷ்ணன் மிக முக்கியமானவர். அவரோட எழுத்துகளில் பயணம், கலாச்சார மாற்றம் மற்றும் சக மனித உணர்வுகளின் வெளிபாடுகள் அதிகம் காணப்படும்.

அவரோட நூல்களில் கேள்விக்குறி என்ற ஒரு புத்தகம்...... அதுல உள்ள கேள்விகள்ல குறைந்தபட்சம் ஒரு கேள்வியாவது நம்ம அன்றாட வாழ்க்கையில எதிர்கொண்டு இருப்போம்.

அத்தனையும் மனசுல நெறிச்சி முள்ளாக இறங்கும் கணைகள்.

நான் அதுல உள்ள நிறைய கேள்விகளை எதிர்கொண்டு இருக்கேன்.

அத்தனையும் என்னோட அவமான பக்கங்களில் அனுபவமாக சேர்ந்து இருக்கு.

சுமார் ஒரு இரண்டு வருடங்களுக்கு முன்பு "Into the Wild" னு ஒரு படம் பார்த்தேன். அந்த உண்மை கதைய மையமா கொண்ட படம் ..உங்களோடு பகிர்ந்துக்க விரும்புகிறான்.

ஒரு கல்லூரி மாணவன் பட்ட படிப்ப முடிசிட்டு .. அந்த பொழுது வரை சம்பாரித்த அனைத்தயும் ஒதுக்கிவிட்டு .. போலித்தனம் இல்லாத வாழ்க்கைமுறைய தேடி பயணப்படுகின்ற, அனுபவம் முலமா கற்றுக்கொள்ளுதல் நிறைவைத்தரும்னு சொல்லுற படம்..



தேடி பாருங்க...


தேடல் இல்லா வாழ்க்கை
காதல் இல்லா காமம் போல...

இன்னும் தொடரும்

8 comments:

இராஜராஜேஸ்வரி said...

மொத்தத்துல தேடல்களால் மட்டுமே ஒருவரை புதுபிக்க முடியுமங்குறது எனது ஆழ்ந்த நம்பிக்கை..//

கண்ணோட்டம் அருமை. பாராட்டுகள்.

கருணாகார்த்திகேயன் said...

வந்தமைக்கு நன்றி ராஜி ..
அன்புடன்
கருணா கார்த்திகேயன்

சமுத்ரா said...

good try...pls avoid spl.mistakes

ரிஷபன் said...

மொத்தத்துல தேடல்களால் மட்டுமே ஒருவரை புதுபிக்க முடியுமங்குறது எனது ஆழ்ந்த நம்பிக்கை..

தேடினதாலதான் உங்களைக் கண்டு பிடிச்சேன்..!

வலிப்போக்கன் said...

கொஞ்சம் புரியாத பின்னுாட்டம்

குறையொன்றுமில்லை. said...

மொத்தத்துல தேடல்களால் மட்டுமே ஒருவரை புதுபிக்க முடியுமங்குறது எனது ஆழ்ந்த நம்பிக்கை..

மிகவும் உண்மைதான். நல்ல பதிவு.

vidivelli said...

தேடல் இல்லா வாழ்க்கை
காதல் இல்லா காமம் போல...




nalla pathivu,,,
valththukkal...


can you come my said?

Bibiliobibuli said...

தேடல்கள் தீர்வதில்லை. பல சமயங்களில் நாங்கள் எதையோ தேடுகிறோம் என்கிற பிரக்ஞை இன்றியே இயல்பாய் தேடுவோம். அதுவும் அழகுதான்.

தேடல்கள் தீர்ந்துவிட்டால் மனித வாழ்வு அர்த்தமற்று போய்விடும் என்பது என் கருத்து.