Friday, June 20, 2008

அழகிய அம்மு ..

கார்த்திக் கடிகாரம் பார்த்தான்.. அய்யோ நேரம் ஆகிடுச்சு..சரியா 11 மணிக்கு அங்க இருக்கனும்.. வேகமாக கார் சாவிய எடுத்துகொண்டு விட்டை பூட்டும்முன் வீட்டை ஒரு முறை பார்த்தான்.. வீடு அலங்கோலமாக... அம்முவோட நினைவு இன்னும் அழமாக வந்தது.. அம்மு அழகிய தேவதை.. எனக்கான தேவதை...

டேய் தடியா.. எழுந்துரு... செல்லம் டைம் ஆச்சுடா...

ம்ம்ம்.... குட் மோர்னிங் ஸ்வீட் ஹார்ட் .. காப்பி எங்கடி கண்ணமா...

அய்யோடா.. கல்யாணத்துக்கு முன்னாடி பல்லுவிளக்காம எதுவும் சப்பிடறது இல்லைன்னு சொன்னிங்க.. இப்ப என்னடான...

இரண்டு மட்டும் இதுல வராது..

ஆஹா.. அது என்ன முக்கியமான இரண்டு...?

ஒன்னு காப்பி...

சரி இரண்டு ..?

நீ..........

ச்ச்சே... அசிங்கம், அசிங்கம்...

அசிங்கம் இல்லடி...அமிர்....

யோவ் சிக்னல் போட்டு 5 நிமிசம் ஆகுது, என்னையா நடு ரோட்டுல கனவு.. அதுவும் சிக்னல் போட்ட அப்புறமும்.. வேகமாக வண்டிய எடுய்யா...

உணர்வு வந்தவனாய் ஆக்சிலேட்டரை அழுத்த வண்டி வேகம் எடுத்தது..

ஹாய் அம்மு ...அம்மு...

இதோ வந்துட்டேன்... வரேன் வரேன்...

இரண்டு நிம்ஷமா கதவை தட்டிகிட்டு இருக்கேன்.. மேடம் என்ன செஞ்சிட்டு இருந்திங்க...

என்ன பதிலயே காணும் .. அம்மு என்னடி உடம்பு சரியில்லையா...

அதல்லாம் ஒன்னும் இல்லமா.. என்னோட முகத்துல ஏதாவது வித்தியாசம் தெரியுதா..?

ம்ம்ம்... எப்போதும் கண்ணுதான் அழகா இருக்கும்.. இன்னைக்கு கண்ணம் ரொம்ப அழகா இருக்கு.. கண்ணையும் மீறி

அப்புறம் ...

இன்னைக்கு சந்தோஷமா.. ரொம்ப அழகா வெட்கபடுற..

அப்புறம் ...

ரொம்ப சஸ்பன்ஸ் வைக்காதடி... யாராவது கேஸ்ட் வந்தாங்களா..?

இல்ல இனிமேல்தான் வர போறாங்க..

யாரு..?

என்ன பார்க்காம திரும்பி நில்லுங்க சொல்லுறேன்..

எதுக்கு...வாவ்வ் கண்ணமா எப்போ...

வேலகார பாட்டி மதியம்தான் கன்பார்ம்் செஞ்சாங்க.. மதியத்துல இருந்து தவிச்சுகிட்டு இருக்கேன் இத சொல்லுறதுக்கு...

அம்மு சந்தோஷத்துல நெஞ்சில சாய்ந்து அழும்போது வந்த உணர்வு இருக்கே..


கீரிச்ச்ச்ச்ச்ச்க்
டேய்.. சாவுகிராக்கி.. நீ சாவுறத்துக்கு என்னோட லாரிதான் கிடைச்சதா..ரோட்டுல , கண்ணையும் , மனசையும் வச்சு கார ஓட்டுயா...

கார்த்திக் கடிகாரம் பார்த்தான்.. மணி 10.45 ஐ காட்டியது... வண்டியை வேகமாக ஓட்ட ஆரம்பித்தான்..

இன்னைக்கும் லேட்டா.. தினமும் இப்படி 10 மணிக்கும், 11 மணிக்கும், வரவேண்டியது.. காலைல 7 மணிக்கே ஆபிசுக்கு போயிடவேண்டியது.., குடும்பம், குழந்தை, பொண்டாட்டினு ஒன்னு இருக்கறதையே வரவர ஞாபக படுத்தவேண்டியிருக்கு..

சாரிடா.. ஆபிசுல கொஞ்சம் வேலை அதிகம்..

அதுதான் தினமும் இருக்குதே.. நீங்க மட்டும்தான் ஆபிசுல வேலை பார்க்கிறிங்களா என்னமோ எல்லாம் நீங்க இருந்தாதான் நடக்குறமாதிரி..

வருஷ கடைசி.. நிறைய வேலை இருக்குடி.. அதை முடிக்காம எப்படி நேரத்துக்கு வீட்டுக்கு வர முடியும்...?

எல்லாத்துக்கும் ஒரு காரணம் .. வர வர நான் வேலைகாரி மாதிரி ஆகிட்டேன்.
இது ஹோட்டல் மாதிரி ஆகிடுச்சு.. சாப்பிடறதுக்கும், தூங்குறதுக்கும் மட்டும்தான் இங்க வரிங்க. பேசாம ஆபிசுல இருக்கவேண்டியதுதானே..

ஏன்டி ஆபிசுலதான் ஒரே தொல்லைனு வீட்டுக்கு வந்தா இங்க நீ வேற..

அப்ப என்னை தொல்லைனு சொல்லுறிங்களா...

டமால்..

என்னத்த போட்டு இப்படி உடைக்கிற.. உனக்கு கொழுப்பு ஜாஸ்தியாகிடுச்சுடீ...

அம்மாஆஆ.....
யோவ் வண்டியவிட்டு இறங்குயா.. இடுச்சுட்டு ராஜமாதிரி உட்கார்ந்துட்டு இருக்க.. என்னையா ஆச்சு அம்மாவுக்கு .. இருக்கா... புடுச்சா... தண்ணி கொண்டாங்கப்பா.. சிக்கிரமா..

ஒரு வழியாக பணத்தை கொடுத்து சரிசெய்து கோர்ட்டுக்கு நுழையவும், வக்கில் எதிரே வரவும் சரியாக இருந்தது...

என்னை வக்கில் சார்.. கேஸ் என்ன ஆச்சு..

கார்த்திக் சார் .. நான் அப்பவே படிச்சு படிச்சு சொன்னேன்.. ஏற்கனவே மூனுவாட்டி வாய்தா வாங்கியாச்சு.. இந்த தடவை நீங்க வந்தாதான் கேஸ கொஞ்சம் இழுக்கமுடியும்னு சொன்னேன்..

சாரி சார் ஒரு சின்ன ஆக்சிடன்ட்.. அதுதான் கொஞ்சம் லேட் ஆகிடுச்சு.. கேஸ் என்ன ஆச்சு..

நாலாவது வாட்டியும் நீங்க வராததால கேஸ் அவுங்க பக்கம் திர்ப்பு ஆகிடுச்சு..

பூமி நழுவுவதை போல் இருந்தது ...
ஓஓஒ கடவுளே.... என்ன சார் இப்படி சொல்லுறிங்க..

நான் என்ன சார் பண்ணுறது..குழந்தை இரண்டு நாள் மட்டும் அதுவும் வாரகடைசியுல உங்ககூட வச்சுக்கலாம். அதுகூட நான் போராடிதான் வாங்கினேன்.

இது தீர்ப்பு நகல் .. புடிங்க..

அம்மு குழந்தையுடன் வருவதை பார்த்ததும் அவளை நோக்கி நடந்தான்..

அம்மு ஒரு அஞ்சு நிமிசம் தனியா பேசனும்..

அதுதான் எல்லாம் முடிஞ்சு போச்சே நமக்குள்ள.. அப்புறம் என்ன இருக்கு...

இந்த கோர்ட்டும் , ஜட்ஜும் சொல்லிட்டா நமக்குள்ள ஒண்ணுமில்லைனு அர்த்தமா...? இவற கேட்டா உன்னை நான் காதலிச்சேன்.. இதோபார்.. உன்கூட நான் சண்டைபோட வரல.. ஒரு அஞ்சு நிமிசம் பேசனும் .. ப்ளீஸ் கடைசியா...

குழந்தையை அம்மாவிடம் கொடுத்துவிட்டு அம்மு வருவது தெரிந்தது..

ம்ம்ம் சொல்லுங்க.. என்ன பேசனும்..

நமக்குள்ள எல்லாம் அவ்வளவுதானா அம்மூ.. முடிங்சுபோச்சா..

அதுதான் கோர்ட்டே..

அதவிடு அம்மு .. நீ சொல்லு .. மனசை தொட்டு சொல்லு .. நான் உன்னை காதலிச்சது நிஜம்.. இப்பவும் காதலிக்கறது நிஜம் ..

உன்னோட Ego விட்டு வெளியேவா அம்மு ..

இதுதான் வாழ்க்கைன்னு உன்னை காதலிக்கல..இவதான் வாழ்க்கைன்னு நெனைச்சு உன்னை காதலித்தேன்.. இப்பவும் உன்னை காதலிக்கிறேன் என்னைவிட.. ஏன் உன்னைவிட ரொம்ப அதிகமா இதை சொல்லுறதுக்கு எனக்கு ஒரு Egoவே, வெட்கமோ இல்ல.. ஏன்னா இது நிஜம் ...

இப்பவும் ஒவ்வொரு நாள் எழுந்திருக்கும் போதும் முதுகுல கோலம்போட்டு நீ எழுப்பமாட்டியானு கண்ணை முடிகிட்டு முழிச்சுதான் படுத்துருக்கேன்..

நீ இல்லாம வீடு மட்டும் இல்ல அம்மு வாழ்க்கையே வெறிச்சோடி போய்ருச்சு .. எல்லாமே மயானமா தெரியுதுடி..

உன்மேல வெச்சுருக்கிற காதலை நான் நிறைய தடவை நிருபித்து காட்டியாச்சு. ஆனா தினம் தினம் நிருபிச்சாதான் காதல்னு சொன்ன வாழ்க்கை ரொம்ப கஷ்டம் அம்மு.. அப்படி நிருபிச்சாதான் காதல்னா அது காதலே இல்லடா...

எல்லாத்துக்கும் மேல நீ இல்லாம எனக்கு வாழ்க்கையே இல்லை ...

இந்த மாதிரி சின்ன சின்ன தப்புக்கு எல்லாம் நீ என்னைவிட்டு பிரியறதுதான் தண்டனைனா.. அதுக்கு நீ என்னை கொன்னுடலாம்.. இப்படி உயிரோட ஒவ்வொரு நிமிசமும் நரக வேதனையில வாழ்றதைவிட...

இப்பவும் சொல்லுறேன் ...
நீ இல்லாம நான் இல்ல
ஏன் நீ இல்லாம நான் எதுவும்மாவே இல்ல

இவ்வளவு சொன்னதுக்கு அப்புறமும். நீ என்ன புரிங்சிக்களைனா.. எனக்கு என்ன சொல்லுறதனு தெரியல..

உனக்காக காத்துகிட்டு இருப்பேன்.. கடைசிவரைக்கும் காதலிச்சுக்கிட்டே..
நான் வரேன் அம்மு .....

தூரமாக நடந்துபோகும் கார்த்திக்கை பார்த்துக்கொண்டே கையில் உள்ள தீர்ப்பு நகலை கிழிக்க தொடங்கினால் காதலுடன் அம்மு........

41 comments:

Anonymous said...

Superb love story.....
Romba romantica irrudhuchu... Same time romba interestinga irrudhuchu....

i don't know how to explain.....
trust me... its really nice....

Regards
Hems

Anonymous said...

Really Great Mams...

Actually speaking i'm not a better reader or understander but this is absolutely fantastic.

I hope your story has come up well. I seriously don't know how to express....

Keep rocking !!!... We will be waiting for your next episode.

Cheers
Vinod.M

Anonymous said...

Maapi,
Vayithula puliya karachita, Kadaisila paala vaatha.

Raasa kadhayila kooda couplesa prikaadha nee nalla irupa...

Gr8 Landing....

Keep it up.
Senthil Kumar G.

Anonymous said...

ai ammu chancea illa.. nalla starting and nalla ending.. ellarukum oru chance kidacha nallathuthanae.. anan sila paeruku latea puriyuthu..ullukulla etho pannuthu mu.. great...

Devathai..

Unknown said...

Machi,

Super da. Really feeeeels like a real romantic, actual life story. My imagination was going as i was reading the story.

Keep it up machi...

Keep writing.

Unknown said...

Superb KarthicK,Dont give any tragic end Karthick

Unknown said...

Really superb karthick.Before I finish the story itself,Ithought U will give some tragic end.Really nice Karthick

Unknown said...

excellent story... i really enjoyed it.. it was so touching..

good job karthi...

rapp said...

நல்ல கதை கார்த்தி. நீங்க வெறும் கதை மட்டும் தொடர்ந்து எழுதாம அப்பப்போ பொதுவான விஷயங்களையும் எழுதுங்களேன். நீங்க அப்படியும் எழிதினா நல்லா இருக்கும். அதோட ஒரு விஷயத்தைப் பத்தின இன்னொரு வித்தியாசமானக் கோணம் வெளிவரும்ல, அதான். தப்பா எடுத்துக்காதீங்க

Divya said...

கார்த்திக்,

மிக மிக அருமையான கதை,
பாராட்ட வார்த்தைகள் கிடைக்கவில்ல,
மிகவும் ரசித்து படித்தேன்.

Divya said...

உரையாடல்கள் மிக மிக இயல்பாக, தெளிவாக இருப்பது கதையின் ப்ளஸ் பாயிண்ட்!!!

Divya said...

தொடர்ந்து இம்மாதிரி நல்ல படைப்புகள் படைக்க என் மன்மார்ந்த வாழ்த்துக்கள் கார்த்திக்:))

rapp said...

karthik,
புதுப் பதிவு போட்டிருக்கேன், நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்க

Shwetha Robert said...

Very cute story with a message, really nice:))

Sri Chandra - Jayalakshmi said...

Karthik....Very interesting story.....

Ama...Antha ammu yaru...

Regards,
Jayalakshmi Karthikeyan

ராமலக்ஷ்மி said...

'அழகிய அம்மு' முடிவில் இன்னும் அழகாயிட்டாங்க.

FunScribbler said...

கார்த்திக், ஒரே வார்த்தை தான் சொல்லவேண்டும் "wow!!"

//இதுதான் வாழ்க்கைன்னு உன்னை காதலிக்கல..இவதான் வாழ்க்கைன்னு நெனைச்சு உன்னை காதலித்தேன்.. //

பொதுவா படம் பார்க்கும்போது தான் விசில் அடித்து கைதட்டி ரசிப்பேன். இப்ப இந்த வரிகளை வாசித்தபிறகு விசில் அடித்து கைதட்டி ரசித்தேன்! ரொம்ப நல்லா எழுதுறீங்க! கதை ரொம்ப அழகா இருக்கு. தொடர்ந்து எழுதவும்!

கருணாகார்த்திகேயன் said...

// Hems said...
Superb love story.....
Romba romantica irrudhuchu... Same time romba interestinga irrudhuchu....
i don't know how to explain.....
trust me... its really nice....

Regards
Hems //

ரொம்ப நன்றி ஹேமா...
தொடர்ந்து படிங்க...

அன்புடன்
கார்த்திகேயன்

கருணாகார்த்திகேயன் said...

// Really Great Mams...

I hope your story has come up well. I seriously don't know how to express....

Keep rocking !!!... We will be waiting for your next episode.

Cheers
Vinod.M //

வாங்க வினோத்..
வந்தமைக்கு நன்றி
சிக்கிரமா எழுதுறேன் !!

அன்புடன்
கார்த்திகேயன்

கருணாகார்த்திகேயன் said...

// Maapi,
Vayithula puliya karachita, Kadaisila paala vaatha.

Raasa kadhayila kooda couplesa prikaadha nee nalla irupa...

Gr8 Landing....

Keep it up.
Senthil Kumar G.//

வாங்க செந்தில்
காதலை பிரிப்பதில் எனக்கும் உடன்பாடு இல்லை ..
வந்தமைக்கு நன்றி
அன்புடன்
கார்த்திகேயன்

கருணாகார்த்திகேயன் said...

// ai ammu chancea illa.. nalla starting and nalla ending.. ellarukum oru chance kidacha nallathuthanae.. anan sila paeruku latea puriyuthu..ullukulla etho pannuthu mu.. great...

Devathai..//
ரொம்ப நன்றி ..
தொடர்ந்து படிங்க...

//ullukulla etho pannuthu mu..//
உள்ளுக்குள்ள நான் இருப்பதால்

வந்தமைக்கு நன்றி தேவதை !
அன்புடன்
கார்த்திகேயன்

கருணாகார்த்திகேயன் said...

// S Srijith said...
Machi,
Super da. Really feeeeels like a real romantic, actual life story. My imagination was going as i was reading the story.
Keep it up machi...
Keep writing.
//

வாங்க ஸ்ரீஜித்
ரொம்ப நன்றி மாம்ஸ்..
தொடர்ந்து படிங்க...

அன்புடன்
கார்த்திகேயன்

கருணாகார்த்திகேயன் said...

//
Rajapriya said...
Really superb karthick.Before I finish the story itself,Ithought U will give some tragic end.Really nice Karthick
//

நன்றி ராஜப்ரிய ,
வந்தமைக்கு , பாராட்டியமைக்கும்.
தொடர்ந்து வாங்க

அன்புடன்
கார்த்திகேயன்

கருணாகார்த்திகேயன் said...

//
Krithika said...
excellent story... i really enjoyed it.. it was so touching..

good job karthi...
//
நன்றி கிருத்திகா ..
நாம்ம கல்லுரி வாழ்க்கைய பத்தி
எழுதனும்னு ஆசைதான்...
சிக்கிரமா எழுதுறேன் !!

அன்புடன்
கார்த்திகேயன்

கருணாகார்த்திகேயன் said...

// rapp said...
நல்ல கதை கார்த்தி. நீங்க வெறும் கதை மட்டும் தொடர்ந்து எழுதாம அப்பப்போ பொதுவான விஷயங்களையும் எழுதுங்களேன். நீங்க அப்படியும் எழிதினா நல்லா இருக்கும். அதோட ஒரு விஷயத்தைப் பத்தின இன்னொரு வித்தியாசமானக் கோணம் வெளிவரும்ல, அதான். தப்பா எடுத்துக்காதீங்க//

Rapp நான் மத்த விஷயத்த தோட்டா
காரமா இருக்கும் .. அதுதான் யோசிக்கிறேன்..
கண்டிப்பா எழுத முயர்சிக்கிறேன்..
வந்தமைக்கு , பாராட்டியமைக்கும் நன்றி

அன்புடன்
கார்த்திகேயன்

கருணாகார்த்திகேயன் said...

//
Divya said...
கார்த்திக்,

மிக மிக அருமையான கதை,
பாராட்ட வார்த்தைகள் கிடைக்கவில்ல,
மிகவும் ரசித்து படித்தேன்.
//

சொல்லரசிக்கு வார்த்தை இல்லையா ??

// Divya said...
உரையாடல்கள் மிக மிக இயல்பாக, தெளிவாக இருப்பது கதையின் ப்ளஸ் பாயிண்ட்!!! //

திவ்யா.. உங்கள மாதிரி தலைங்க சொன்னதால
நானும் நம்புகிறேன்...

// Divya said...
தொடர்ந்து இம்மாதிரி நல்ல படைப்புகள் படைக்க என் மன்மார்ந்த வாழ்த்துக்கள் கார்த்திக்:)) //

கண்டிப்பா எழுதுறேன் !
வந்தமைக்கு , பாராட்டியமைக்கும் நன்றி !
தொடர்ந்து வாங்க.

அன்புடன்
கார்த்திகேயன்

கருணாகார்த்திகேயன் said...

// Shwetha Robert said...
Very cute story with a message, really nice:)) //

ரொம்ப நன்றி ஸ்வேத ராபர்ட் ,
வந்தமைக்கு , பாராட்டியமைக்கும்

அன்புடன்
கார்த்திகேயன்

கருணாகார்த்திகேயன் said...

// Jayalakshmi said...
Karthik....Very interesting story.....

Ama...Antha ammu yaru...

Regards,
Jayalakshmi Karthikeyan //

வாங்க வாங்க ஜெயா மேடம் ..
நல்ல இருக்கிங்களா...
பாலாஜி எப்படி இருக்கிறார்..

தேவதை = அம்மு
ரத்தமும் , சதையுமாய் என்னோட
உயிரில் கலந்த ஒரு பொண்ணு ....

வந்தமைக்கு , பாராட்டியமைக்கும் நன்றி !
தொடர்ந்து வாங்க மேடம் ..
அன்புடன்
கார்த்திகேயன்

கருணாகார்த்திகேயன் said...

// ராமலக்ஷ்மி said...
'அழகிய அம்மு' முடிவில் இன்னும் அழகாயிட்டாங்க. //

ஹா ஹா ஹா ..
அம்மு அழகா எனக்கு தெரிந்ததாலையே
இந்த கதை ராமலக்ஷ்மி ...
வந்தமைக்கு , பாராட்டியமைக்கும் ரொம்ப ரொம்ப நன்றி
தொடர்ந்து வாங்க

அன்புடன்
கார்த்திகேயன்

கருணாகார்த்திகேயன் said...

// Thamizhmaangani said...
கார்த்திக், ஒரே வார்த்தை தான் சொல்லவேண்டும் "wow!!"

பொதுவா படம் பார்க்கும்போது தான் விசில் அடித்து கைதட்டி ரசிப்பேன். இப்ப இந்த வரிகளை வாசித்தபிறகு விசில் அடித்து கைதட்டி ரசித்தேன் //

தமிழ்மாங்கனி காதல்னா எலோருக்கும்..
ஒரு சந்தோஷம்.. அதுதான் என்னோட
வார்த்தையா வந்துருக்கு ..
ரொம்ப நன்றி தமிழ் ..
தொடர்ந்து வாங்க

அன்புடன்
கார்த்திகேயன்

கருணாகார்த்திகேயன் said...

இது எல்லாம் மெயில்ல வந்த
கருத்துக்கள் ..

// Nice on karthi............... Enjoyed a lot the words which u have used here is really touching
good da
Alagu Meenal //

ரொம்ப நன்றி மீனா ..
மகாலக்ஷ்மிய கேட்டதா சொல்லவும்
அன்புடன்
கார்த்திகேயன்

கருணாகார்த்திகேயன் said...

இது எல்லாம் மெயில்ல வந்த
கருத்துக்கள் ..
// kayalsm said ..
its really superb karthi......... every lovers should read this story...... including myself....
//

காதல் உன்னையும் காதலிக்க
ஆரம்பித்துவிட்டதா வாழ்த்துகள் கயல்...

அன்புடன்
கார்த்திகேயன்

rapp said...

எப்போ புதுப் பதிவு கார்த்தி?

கருணாகார்த்திகேயன் said...

//rapp said...
எப்போ புதுப் பதிவு கார்த்தி?
//

சிக்கிரமா எழுதுறேன் Rapp!!

anbudan
karthikeyan

FunScribbler said...

//தமிழ்மாங்கனி காதல்னா எலோருக்கும்..
ஒரு சந்தோஷம்..///

அவ்வ்வ்... நூத்துல ஒரு வார்த்தை!

//தொடர்ந்து வாங்க//

கண்டிப்பா வருவோம்ல!:))

DJ Wir said...

Sathiyama solren.....kadai is something I like to listen to and not read.

Karthik, inda kadai sonnapo....enaku pularichi pochu.

Silaperu sollalan, Mouna Ragam mari iruku, inda padam mari iruku anda padam mari irukunnu anna yaarukavadu, inda madiri oru kadai yezhudanunnu thonicha.

Kadai, yaaru venunalum yezhudalaam anna yelarukum pudicha madiri yezhuduradu kashttam. Adu namma anbu thozhan...arumai sagotharan....iniya selvan...thiru K.....K seidu irukirar.

கயல்விழி said...

நல்ல கதை கார்த்திக். அவ்வை ஷன்முகி ஸ்டைல்? :) :)

நிச்சயம் லேடீஸ் ஆடியன்ஸுக்கு ரொம்ப பிடிக்கும்.

கருணாகார்த்திகேயன் said...

// Vivek said...
Sathiyama solren.....kadai is something I like to listen to and not read. //

Thank you very much da mams....
Its really happy to get such a
wishes from you !!

with love
karthikeyan

கருணாகார்த்திகேயன் said...

// கயல்விழி said...
நல்ல கதை கார்த்திக். அவ்வை ஷன்முகி ஸ்டைல்? :) :) //

நீங்க சொன்னதுக்கப்புறம்தான் நானும் யோசிக்கிறேன்...
ஆனால் கார்த்திக்கும் , அம்முவும் நிஜம்,
அந்த காதலும் நிஜம் ...

//நிச்சயம் லேடீஸ் ஆடியன்ஸுக்கு ரொம்ப பிடிக்கும். //

அப்ப உங்களுக்கு கண்டிப்பா புடிச்சிருக்கும்..
ரொம்ப நன்றி , வந்தமைக்கு ...

அன்புடன்
கார்த்திகேயன்

Sridhar said...

இந்த காவியம்... படம் ஆகும் :)

ramya said...

Dear Karthick,

Very very nice romantic story .......... no one can express their love more than this

"Inthu than Valkai nu nicha unna kadhalika.iva than valka ni ninachi unna kadhalichen "

Ore rasigaya oru ponna unmayana manasoda ennala itha love ah unara mudiyuthu

Most touching lines....

Un mela ula kadhala niriya thadava nirubichachu... ana daily nirupicha than kadhal nu sona valkai romba kastam

Niraya love piriya kudiya karanatha ore line la solitingale karthick....

U know i am good in reading books & read many novels no one can express this ego more than this

Very good stories pls continue writing